செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
ccc4ecfc-eb6a-4c65-8116-79a4a7a983c5
-

மின்னிலக்க கல்வி முறை பரவலாகும்: கர்நாடக முதல்வர் நம்பிக்கை

பெங்களூரு: மிக விரைவில் கர்நாடகா முழுவதும் மின்னிலக்க கல்வி முறை பரவலாகப் பின்பற்றப்படும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

"மின்னிலக்க மயம் என்பது இன்னும் கிராமப்புற மக்களைச் சென்றடையவில்லை. வரும் நாள்களில் இக்கல்வி முறையைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். மின்னிலக்க கல்வி முறைக்கான ஒரு தொழில்நுட்பத்தை மாநில அரசே உருவாக்கி வருகிறது," என முதல்வர் பசவராஜ் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் வலுவான சுகாதார கட்டமைப்பு: இந்தியா வலியுறுத்து

திருவனந்தபுரம்: கொரோனா தொற்றுப்பரவல் போன்ற நெருக்கடிகளில் இருந்து மக்களைப் பாதுகாக்க உலகம் முழுவதும் உறுதியான சுகாதாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தி உள்ளது. ஜி20 அமைப்பின் சுகாதாரச் செயற்குழு கூட்டம் திருவனந்தபுரத் தில் நடைபெற்றது. இதில் பேசிய மத்திய குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், உலகளாவிய அளவில் சுகாதார அச்சுறுத்தல் ஏற்பட்டால் அனைவரும் இணைந்து செயல்படுவது அவசியம் என்றார். இதற்காக இந்தியா தனது பங்களிப்பை குறைவின்றி அளிக்கும் என்றும் அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.