நன்கொடை பெறுவதில் முதலிடம் பெற்றது பாஜக

நன்கொடை பெறுவதில் முதலிடம் பெற்றது பாஜக

1 mins read
28fe4f01-3cb4-4667-a41e-392242af1dda
திரு­வ­னந்­த­பு­ரம்: இந்­தி­யா­வில் அர­சி­யல் கட்­சி­கள் நன்­கொடை பெறு­வ­தில் பாஜக மீண்­டும் முத­லி­டம் பெற்­றுள்­ளது. படம்: பிக்ஸாபே -

திரு­வ­னந்­த­பு­ரம்: இந்­தி­யா­வில் அர­சி­யல் கட்­சி­கள் நன்­கொடை பெறு­வ­தில் பாஜக மீண்­டும் முத­லி­டம் பெற்­றுள்­ளது. மேலும், கடந்த ஆண்­டை­விட அக்­கட்சி பெற்ற நன்­கொ­டை­கள் 154 விழுக்­காடு அதி­க­ரித்­துள்­ளது.

நாட்­டில் உள்ள அர­சி­யல் கட்­சி­கள் பெற்ற நன்­கொடை குறித்த விவ­ரங்­களை தேர்­தல் ஆணை­யம் ஆண்­டு­தோ­றும் வெளி­யி­டு­கிறது.

கடந்த 2020-21ஆம் நிதி­யாண்­டில் பாஜக, 752 கோடி ரூபாயை நன்­கொ­டை­யா­கப் பெற்­றி­ருந்­தது. நடப்­பாண்­டில் அத்­தொ­கை­யா­னது ரூ.1,917 கோடி­யாக உயர்ந்­துள்­ளது. இது 154% அதி­க­மா­கும்.

இப்­பட்­டி­ய­லில் இரண்­டாம் இடத்­தில் இருந்த காங்­கி­ரஸ் கட்­சி­யைப் பின்­னுக்­குத் தள்­ளி­யுள்­ளது திரி­ணா­மூல் காங்­கி­ரஸ்.

அக்­கட்­சிக்கு நன்­கொ­டை­யாக நடப்­பாண்­டில் ரூ.545.7 கோடி கிடைத்­துள்­ளது. காங்­கி­ரஸ் கட்­சிக்கு ரூ.541.2 கோடி கிடைத்­தது.

கடந்த ஆண்டு காங்­கி­ரஸ் கட்சி பெற்ற நன்­கொ­டை­கள் ரூ.285.70 கோடி. தற்­போது அது 89% அதி­க­ரித்­துள்­ளது. கடந்த நிதி­யாண்­டில் நாட்­டில் உள்ள எட்டு தேசிய கட்­சி­கள் ஒட்­டு­மொத்­த­மாக ரூ.3,289 கோடியை நன்­கொ­டை­யா­கப் பெற்­றுள்­ளன. மாநில கட்­சி­களில் திமுக கடந்த நிதி­யாண்­டில் ரூ.318.7 கோடி­யுடன் முதலிடத்தில் உள்ளது.