இறந்த பின்னர் 'காதலுக்கு மரியாதை' செய்த பெற்றோர்

இறந்த பின்னர் 'காதலுக்கு மரியாதை' செய்த பெற்றோர்

1 mins read
77d34c80-b0e8-4614-a206-b6209a449a79
-

அக­ம­தா­பாத்: காத­லித்­த­போது திரு­ம­ணம் செய்­து­வைக்க மறுத்­து­விட்டு, காத­லர்­கள் இரு­வ­ரும் உயிரை மாய்த்­துக்­கொண்ட பிறகு அவர்­க­ளது சிலை­க­ளுக்கு அவர்­க­ளு­டைய பெற்­றோர் திரு­ம­ணம் செய்­து­வைத்த சம்­ப­வம் இந்­தி­யா­வின் குஜ­ராத் மாநி­லத்­தில் நிகழ்ந்­துள்­ளது.

அம்­மா­நி­லத்­தில் உள்ள தாபி பகு­தி­யைச் சேர்ந்த கணேஷ், ரஞ்­சனா இரு­வ­ரும் காதல் வயப்­பட்­ட­னர்.

இது­கு­றித்து இரு­வ­ரது பெற்­றோ­ருக்­கும் தெரி­ய­வந்­த­போது, காத­லுக்கு கடும் எதிர்ப்பு கிளம்­பி­யது.

இத­னால் மன­மு­டைந்த காத­லர்­கள் இரு­வ­ரும் உயிரை மாய்த்­துக்­கொண்­ட­னர்.

அதன் பிறகு இரு­வ­ரது பெற்­றோ­ரும் மனம் மாறி­னர். இளம் காதல் ஜோடி எடுத்த விப­ரீத முடி­வுக்கு தங்­க­ளு­டைய எதிர்ப்­பு­தான் கார­ணம் என மனம் வருந்­தி­னர்.

இதை­ய­டுத்து இரு­வ­ரின் குடும்­பத்­தி­ன­ரும், ஆறு மாதங்­க­ளுக்­குப் பிறகு கணேஷ்-ரஞ்­சனா சிலை­களை தத்­ரூ­ப­மாக செய்து அவற்­றுக்­குத் திரு­ம­ணம் செய்­து­வைத்­துள்­ள­னர்.

இறந்­த­வர்­க­ளின் ஆன்மா அமை­தி­கொள்ள வேண்­டும் என்­ப­தற்­காக இரு­வ­ரது விருப்­பத்தை நிறை­வேற்ற தாங்­கள் இவ்­வாறு செய்­த­தாக அவர்­க­ளின் பெற்­றோர் தெரி­வித்­த­னர்.