தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம்

1 mins read
bc819659-56f0-4e6c-a955-6ad8e3b12881
சம்பந்தப்பட்ட விமானியின் உரிமம் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி -

புதுடெல்லி: நியூயார்க்கில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் பெண் பயணிமீது குடிபோதையில் ஆடவர் ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பில் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் (டிஜிசிஏ), ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் (S$49,000) அபராதம் விதித்துள்ளது.

அவ்விமானத்தை இயக்கிய விமானியின் உரிமம் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கடமையைச் செய்யத் தவறியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்தின் பயணிகள் சேவை இயக்குநருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

முன்னதாக, பெண் பயணிமீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா என்ற அந்த ஆடவருக்கு விமானத்தில் பறக்க நேற்று வியாழக்கிழமை நான்கு மாதத் தடை விதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி நடந்த அச்சம்பவம் தொடர்பில் விமானத்தில் பறக்க மிஸ்ராவிற்கு ஏற்கெனவே 30 நாள்கள் தடை விதிக்கப்பட்டிருந்தது.

சம்பவம் நிகழ்ந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, அதாவது இம்மாதம் 6ஆம் தேதி டெல்லி காவல்துறையினர் மிஸ்ராவைக் கைதுசெய்தனர்.

குறிப்புச் சொற்கள்