தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூதாட்டி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்

1 mins read
c99278b7-ab94-4bdf-ade7-5e16aed40fb2
-

புது­டெல்லி: விமா­னத்­தில் 70 வயது மூதாட்டி மீது ஆண் பயணி ஒரு­வர் சிறு­நீர் கழித்­த­தாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­கா­மல் அலட்­சி­யம் காட்­டி­ய­தாக ஏர் இந்­தியா நிறு­வ­னத்­திற்கு டிஜி­சிஏ எனப்­படும் சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து இயக்­கு­ந­ர­கம் ரூ.30 லட்­சம் அப­ரா­தம் விதித்துள்­ளது.

விதி­மு­றை­களை மீறியதற்­காக இந்த அப­ரா­தம் விதித்துள்ளதுடன், சம்பவத்தின்போது பணியில் இருந்த விமானியின் உரிமத்தை மூன்று மாதத்திற்கு இடைக் காலமாக ரத்து செய்தும் உத்தர விட்டுள்ளது. தனது கட­மை­யைச் செய்யத் தவ­றி­ய­தாக ஏர் இந்­தியா நிறு­வ­னத்­தின் விமா­னச் சேவை­கள் இயக்­கு­ந­ருக்கு ரூ.3 லட்­சம் அப­ரா­தம் விதித்­துள்­ளது. கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு வந்த விமானத்தில், சக பயணி ஒருவர் குடிபோதையில் மூதாட்டி மீது சிறுநீர் கழித்தார்.