இந்தியாவில் கருத்தரிப்பதற்காக பெண் ஒருவருக்கு தூளாக்கப்பட்ட மனித எலும்புகள் வலுகட்டாயமாக ஊட்டப்பட்டது. பெண்ணின் கணவரும், கணவரின் பெற்றோரும் இந்த அதிரிச்சியான செயலை புரிந்துள்ளனர். தாந்திரீக வழிபாட்டில் ஈடுபட்ட அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர். புனே நகரில் இந்தச சம்பவம் நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பெண்ணின் கணவர், அவருடைய பெற்றோர், தாந்திரீகத்தில் ஈடுபட்டவர் உள்பட ஏழு பேரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
அமாவாசை இரவுகளின்போது மூடநம்பிக்கையான செயல்களை புரிய தான் வற்புறுத்தப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறினார். சில அமாவாசை இரவுகளில் தன்னை தன்னுடைய கணவரும் அவருடைய பெற்றோரும் இடுகாட்டுக்கு அழைத்து சென்றதாகவும் அங்கு பொடி செய்யப்பட்ட மனித எலும்புகள் உண்ணும்படி கட்டாயப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
சில சமயங்களில் பெண்ணை நீர்வீழ்ச்சிக்கு அழைத்து சென்றதாகவும் அங்கு அவரை வைத்து அகோரி வழிபாடுகள் செய்யப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் குறிப்பிட்ட இடுகாட்டில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

