மூன்று நாள்களாக கட்டடங்களில் விரிசல் இல்லை: ஜோஷிமத் மக்கள் நிம்மதி

மூன்று நாள்களாக கட்டடங்களில் விரிசல் இல்லை: ஜோஷிமத் மக்கள் நிம்மதி

2 mins read
1a52a302-1417-4e9f-b53a-27afd5b3b1e3
-

டேராடூன்: உத்தராகண்ட் மாநி லத்தில் உள்ள ஜோஷிமத் நகரில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள வீடுகளை இடித்து அப்புறப் படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில் அங்கு கடந்த மூன்று நாள்களாக சாலைகள், கட்டடங்களில் புதிதாக விரிசல்கள் ஏதும் ஏற்படவில்லை என அரசு அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

புனித நகரம் எனக் குறிப்பிடப்படும் ஜோஷிமத் நகரில் அண்மைய சில நாள்களாக கட்டடங்கள், சாலைகளில் திடீர் விரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் அச்சமும் கவலையும் நிலவி வருகின்றன.

இதற்கான காரணம் குறித்து அங்கு தீவிர ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. விரிசல் ஏற்பட்டுள்ள கட்டடங் களில் பெரும்பாலானவற்றை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் இல்லையெனில் பெரும் சேதங்கள் ஏற்படக்கூடும் எனவும் நிபுணர்கள் அறிவிறுத்தி உள்ளனர்.

இதையடுத்து, ஜோஷிமத் நகரில் இரண்டு தங்குவிடுதிகள் இடிக்கப்பட்டன. பின்னர் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளை இடிக்கும் பணி தீவிரப்படுத் தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜேபி காலனி பகுதியில் உள்ள மிகப்பெரிய கட்டடச் சுவரில் இருந்து தண்ணீர் வேகமாக வெளியேறி வருகிறது. சில நாள்களுக்கு முன்பு, ஒரு நிமிடத்துக்கு 540 லிட்டர் தண்ணீர் வெளியேறிய நிலையில், தற்போது அது நிமிடத்துக்கு 120 லிட்டராக குறைந்துள்ளது.

இந்த தண்ணீர் பிரச்சினை காரணமாக, அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் மேலும் பாதிக்கப் படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். வீடுகளில் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள தாகவும் 867 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதுவரை விரிசல் ஏற்பட்டுள்ள 849 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வும் அவற்றுள் 181 வீடுகள் அபாயப் பகுதியில் உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

சில நாள்களாக புதிதாக விரிசல்கள் ஏற்படாதது ஜோஷிமத் நகர மக்களுக்கு தற்காலிகமாக நிம்மதி அளித்துள்ளது.