ரஷ்யாவில் இருந்து வந்த விமானம்; இரண்டாவது முறையாக விடுக்கப்பட்ட மிரட்டல்
பானாஜி: ரஷ்யாவில் இருந்து கோவா வந்து கொண்டிருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் உஸ்பெகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டது.
எனினும் எந்தவித அசம் பாவிதமும் இன்றி அந்த விமா னத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் தரையிறங்கினர்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் நேற்று அதிகாலை ஏறத்தாழ நான்கு மணியளவில் கோவாவில் உள்ள தபோலிம் விமான நிலையத்தில் தரை யிறங்கியிருக்க வேண்டும்.
அந்த விமானத்தில் இரண்டு சிறார்கள் உட்பட 238 பயணிகளும் ஏழு விமானப் பணியாளர்களும் இருந்தனர்.
இந்நிலையில், அந்த விமா னத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவா விமான நிலைய இயக்குநருக்கு மின்னஞ்சல் வழி மிரட்டல் வந்தது.
குறிப்பிட்ட விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அந்த மின்னஞ்சலில் குறிப் பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து கோவா விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்து மாஸ்கோவில் இருந்து வந்து கொண்டிருந்த விமானத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அந்த விமானம் உடனடியாக உஸ்பெகிஸ்தானில் தரையிறங்கியது. அங்குள்ள விமான நிலையத்தில் விமானம் தரையிறங்குவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டன
விமானம் தரையிறங்கியதில் அனைத்து பயணிகளும் பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர். மாஸ்கோவில் இருந்து கோவா வுக்கு வரும் விமானத்துக்கு குறுகிய காலத்தில் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த 9ஆம் தேதி இதேபோன்ற மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அந்த விமானம் குஜராத்தில் தரையிறங்கியது.

