புதுடெல்லி: மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் ரஷ்யாதான் இந்தியாவின் மிக அணுக்கமான நட்பு நாடு என இந்திய இளையர் கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா இந்தியாவின் நட்பு நாடாகக் கருதப்படுகிறது.
உக்ரேன் போருக்கு ரஷ்யாதான் காரணம் என 38 விழுக்காடு இந்தியர்கள் கருதுவதாகவும் 26% இந்தியர்கள் இவ்விஷயத்தில் அமெரிக்காவையும் 18% பேர் நேட்டோ நாடுகளையும் குற்றம் சாட்டுவதாக கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
இந்தியாவுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நாடு களில் சீனா முதல் இடத்தில் இருப்பதாக 43 விழுக்காடு இந்தியர்கள் கருதும் நிலையில், ஜி-20 கூட்டங்களுக்கு இடையே இந்திய, சீன தலைவர்கள் பேச்சுவார்த்தை நடந்தாலும், சீனா தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என இந்தியர்கள் கருதுகின்றனர்.
"இதனால் அமெரிக்காவுடன் இந்தியாவின் நெருக்கம் அதிகரித்து வருகிறது. இருந்த போதிலும், 22% பேர் சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்காதான் இந்தியாவுக்கு அச்சறுத்தலாக உள்ளது.
"அமெரிக்கா, சீனா இடையே யான மோதல் அதிகரிக்கும் பட்சத்தில், இந்தியாவுக்கு சிக்கல் ஏற்படக்கூடும் என இந்தியர்கள் கருதுகின்றனர்," என மார்னிங் கன்சல்ட் நிறுவனம் வெளி யிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச் சினையானது தொடர்ந்து பெரிதாகி வரும் சூழலில், இந்தக் கருத்துக்கணிப்பு விவரங்கள் வெளியாகி உள்ளது.

