முகேஷ் அம்பானி மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம்

முகேஷ் அம்பானி மகனுக்கு திருமண நிச்சயதார்த்தம்

1 mins read
95ccdd0b-af47-42a5-84ba-e37bc12c221a
மும்பை: முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி யின் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் விமரிசையாக நடந்தேறியது. படம்: த இந்து -

மும்பை: முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி யின் திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் விமரிசையாக நடந்தேறியது.

அவருக்கும் முன்னணி நிறுவனம் ஒன்றின் தலைமைச் செயலதிகாரியின் மகள் ராதிகா மெர்ச்சண்ட்டுக்கும் நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்வில் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் மிகப் பிரம்மாண்ட இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அப்போது தங்கள் வீட்டு மருமகளை வரவேற்கும் விதமாக முகேஷ் அம்பானி குடும்பத்தினர் திரைப்பாடலுக்கு நடனமாடி மகி்ழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

குஜராத்தி பாரம்பரிய முறைப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்றது என்றும் அப்போது வருங்கால மனைவிக்கு ஆனந்த் அம்பானி மோதிரம் அணி வித்தார் என்றும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இதையடுத்து, மணமக்களும் குடும்பத்தாருடனும் நெருக்க மான நண்பர்களுடனும் நீண்ட நேரம் நடனமாடி மகிழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இந்தி நடிகர் ஷாரூக் கான் உட்பட ஏராள மானோர் கலந்துகொண்டனர்.

திருமண நிச்சயதார்த்தத்தை யொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முக்கியப் பிரமுகர்கள் பங் கேற்றதால் காவலர்கள் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டி ருந்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமண நிகழ்வு மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.