பிரதமர் நரேந்திர மோடி பற்றிய பிபிசி ஆவணப் படத்தை இந்தியா தடை செய்துள்ளது. இந்தப் படத்தில் 2002ல் நடந்த குஜராத் கலவரத்தின்போது திரு மோடியின் தலைமைத்துவம் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்தப் படத்தின் பகுதிகளை சமூகத் தளங்களில் பகிர்ந்துகொள்ளவும் தடை செய்யப்பட்டுள்ளது.
டுவிட்டர், யுடியூப் ஆகிய சமூகத் தளங்களில் ஆவணப்படத்தை தடைசெய்ய அந்நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
2002-ம் ஆண்டில் குஜராத்தில் கலவரம் ஏற்பட்டபோது அந்த மாநிலத்தின் முதல்வராக திரு மோடி பதவி வகித்தார். அந்த கலவரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாண்டனர். கலவரத்தை தடுக்க தான் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை திரு மோடி மறுத்துள்ளார்.

