புதுடெல்லி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் அந்தந்த மாநில மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் எனக் கூறிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
''உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளில் கிடைக்கச் செய்வது குறித்தும் இதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்தும் அண்மையில் சந்திரசூட் பேசியுள்ளார். இது பாராட்டுக்குரிய சிந்தனை," என டுவிட்டரில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

