குருவாயூர் கோயில் இருப்பில் 264 கிலோ தங்கம்

குருவாயூர் கோயில் இருப்பில் 264 கிலோ தங்கம்

1 mins read
27518d5f-e1cf-4496-a2e4-cf4c9d5054f5
-

திரிச்­சூர்: கேரள மாநி­லம் குரு­வா­யூர் ஸ்ரீ கிருஷ்­ணர் கோயி லுக்கு இது­வரை 264 கிலோ தங்­கம், 20,000 தங்­கத் தக­டு­களைப் பக்­தர்­கள் காணிக்­கை­யாக வழங்கியுள்­ளனர். அத்துடன், இக்கோயில் பெய­ரில் ரூ.1,700 கோடிக்கு வங்கியில் வைப்புத் தொகை உள்ளது. இதுதவிர, 271.05 ஏக்­கர் நிலம் கோயில் பெய­ரில் காணிக்­கை­யாக வழங்­கப்­பட்­டுள்­ளது. தக­வல் அறி­யும் உரிமைச் சட்­டத்­தின்கீழ் கேட்­கப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு அதி­கா­ரி­கள் இவ்வாறு பதிலளித்துள்ளனர்.