பிபிசி ஆவணப் படத்துக்கு 300 பிரபலங்கள் எதிர்ப்பு

பிபிசி ஆவணப் படத்துக்கு 300 பிரபலங்கள் எதிர்ப்பு

1 mins read
bcf81d85-6724-423d-a48a-565440a43a9f
இந்­தி­யா­வின் 13 முன்­னாள் நீதி­ப­தி­கள், 133 ஓய்வுபெற்ற தூத­ரக உய­ர­தி­காரி­கள், 156 ராணுவ உய­ர­தி­கா­ரி­கள் உட்­பட பல்­வேறு துறை­க­ளின் 300க்கும் மேலான பிர­பலங்­கள் ஆவ­ணப் படத்­துக்கு கடும் எதிர்ப்புத் தெரி­வித்­துள்­ள­னர். படம்: ஏஃப்பி -

புது­டெல்லி: பிர­த­மர் நரேந்திர மோடி குறித்து பிபிசி வெளி­யிட்ட ஆவ­ணப்­ப­டத்­துக்கு முன்­னாள் நீதி­பதி­கள், உளவுத்துறை அமைப்­பின் முன்­னாள் தலை­வர் உள் ளிட்ட பல துறைகளின் 300க்கும் மேலான பிர­ப­லங்­கள் கடும் எதிர்ப்­புத் தெரி­வித்­துள்­ள­னர்.

கடந்த 2002ஆம் ஆண்­டில் குஜ­ராத்­தில் கல­வ­ரம் ஏற்­பட்ட போது அம்­மா­நில முதல்­வ­ராக மோடி ஆட்சி செய்து வந்­தார்.

இந்­தக் கல­வ­ரத்­துக்­கும் பிர­த­மர் மோடிக்­கும் தொடர்பு இருப்­பது போன்று 'இந்­தியா - மோடி குவெஸ்டியன்' என்ற தலைப்­பி­லான ஆவ­ணப்­ப­டத்­தில் கருத்­து­கள் இடம்­பெற்­றி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதற்கு பாஜக தலை­வர்­கள் கடும் கண்­ட­னம் தெரி­வித்து வரும் நிலை­யில், இந்­தி­யா­வின் 13 முன்­னாள் நீதி­ப­தி­கள், 133 ஓய்வுபெற்ற தூத­ரக உய­ர­தி­காரி­கள், 156 ராணுவ உய­ர­தி­கா­ரி­கள் உட்­பட பல்­வேறு துறை­க­ளின் 300க்கும் மேலான பிர­பலங்­கள் ஆவ­ணப் படத்­துக்கு கடும் எதிர்ப்புத் தெரி­வித்­துள்­ள­னர்.

இது­கு­றித்து தங்­க­ளது கையெ­ழுத்­து­டன் அவர்­கள் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், "பிர­த­மர் மோடி பற்­றிய பிபிசி ஆவ­ணப்­ப­டம் தவ­றான, பார­பட்­ச­மான முறை­யில் சித்­தி­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­திய சுதந்­தி­ரத்­தின் அடித்­த­ளத்­தையே கேள்­விக்­கு­றி­யாக்­கும் வகை­யில் பிர­த­ம­ருக்கு எதி­ராக உள்­நோக்­கத்­து­டன் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது தெளி­வா­கத் தெரி­கிறது," என குறிப்­பிட்­டுள்­ள­னர்.

இத­னி­டையே, பிபிசி ஆவ­ணப் படத்­துக்கு தடை விதித்து, ஆவ­ணப் படக் காணொ­ளி­கள், கருத்­து­களை நீக்க சமூக வலைத் தளங்­க­ளுக்கு மத்­திய அரசு உத்­த­ர­விட்­டது. இதை­யடுத்து, டுவிட்­டர், யூடி­யூப் நிறு­வ­னங்­கள் காணொ­ளிப் பதி­வு­களை நீக்கி வரு­கின்­றன.