லக்னோ: வட மாநிலங்களில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உடலை நடுங்கவைக்கும் குளிர் நிலவும். இச்சூழலில்,
உ.பி. மாநிலம், லக்னோவில் உள்ள அனோகா மால் என்ற கடைத்தொகுதி, கடந்த ஐந்தாண்டுகளாக ரிக் ஷா ஓட்டுநர்கள், குடிசை வாசிகள், அடித்தட்டு மக்கள் உள்ளிட்டோருக்கு கம்பளி ஆடைகள், போர்வைகளை இலவசமாக வழங்கி வருகிறது.
ஏழைகளுக்கு நன்கொடை வழங்க விரும்புபவர்கள், பயன்படுத்தக்கூடிய தரத்துடன் கூடிய பொருள்களை கடைத் தொகுதியில் வைத்துவிட்டுச் செல்லவும் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கடைத்தொகுதியை நடத்தி வரும் மருத்துவர் அகமது ராசா கான் கூறியுள்ளார்.

