விபத்தில் 5 இஸ்ரோ ஊழியர்கள் மரணம்

விபத்தில் 5 இஸ்ரோ ஊழியர்கள் மரணம்

1 mins read
428a6546-ab40-427c-a7f8-e59ddf0ae1f8
-

ஆலப்­புழா: கேரள மாநி­லம் ஆலப்­புழா மாவட்­டத்­தில் நேர்ந்த ஒரு சாலை விபத்­தில், இந்­திய விண்­வெளி ஆராய்ச்சி மையத் தில் (இஸ்ரோ) பணி­யாற்­றும் ஐந்து ஊழி­யர்­கள் பலி­யா­கி­னர்.

கேரள மாநி­லத்தைச் சேர்ந்­த­ பிர­சாத், ஷிஜூ, அமல், சச்­சின், சுமோத் ஆகி­ய ஐவரும் திரு­வனந்­த­பு­ரம் இஸ்ரோ மையத்­தில் உள்ள உண­வ­கத்­தில் பணி­யாற்றி வந்­த­னர்.

இந்­நி­லை­யில், ஆலப்­பு­ழா­வில் நடை­பெ­றும் தங்­க­ளது நண்­பர் ஒரு­வ­ரின் திரு­மணத் தில் பங்­கேற்­ப­தற்­காக அவர்கள் நேற்று அதி­கா­லை­யில் அம்­பலப்­புழா தேசிய நெடுஞ்­சா­லை­யில் காரில் சென்றுகொண்­டி­ருந்த னர். அப்போது, ஆந்­தி­ரா­வில் இருந்து வந்த சரக்கு வாகனம் ஒன்று கண் ­இ­மைக்­கும் நேரத்­தில் மோதிய­தில் கார் அப்­ப­ளம் போல் நொறுங்­கி­யது.

இவ்விபத்­தில் 24 முதல் 30 வயது வரை­யி­லான ஐந்து ஆட­வர்­களும் பலி­யா­ன­தாக முதற்­கட்ட தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. லாரி ஓட்டுநர், அவரது உதவியாளரைக் கைது செய்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.