புதுடெல்லி: சீனாவில் நாளும் அதிகரித்து வரும் பிஎஃப் 7 வகை கொரோனா கிருமித் தொற்று, இந்தியாவில் பரவாமல் தடுக்கும் வகையில், தடுப்பூசி போடும் பணிகளை மீண்டும் மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு கூறாக, நாளை மறுநாள் 26ஆம் தேதி முதல் மூக்குவழி போடப்படும் 'இன்கோவாக்' தடுப்பு மருந்து அறிமுகப் படுத்தப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனத் தலைவர் கிருஷ்ணா எல்லா அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த மருந்து தனியாருக்கு ரூ.800க்கும் அரசுக்கு ரூ.325க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

