5 ரூபாய் செலவில் திருமணம்

5 ரூபாய் செலவில் திருமணம்

1 mins read
e49f4c24-aee1-4c2b-a421-a23519d47ca2
-

திருப்பதி: ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அமிடாலா கிராமத்தைச் சேர்ந்த இளையர் ஒருவர், எட்டாம் வகுப்பில் படித்துவரும் தன் உறவுக்கார சிறுமியைக் காதலித்து மணம் புரிந்துள்ளார்.

சிறுமியை மணப்பதற்கு தாலி கயிறு வாங்க மூன்று ரூபாய், மஞ்சள் கிழங்கு வாங்க இரண்டு ரூபாய் என ஐந்து ரூபாய் மட்டுமே அவர் செலவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெற்றோர் முன்னிலையில் ஒரு விளையாட்டுபோல் நடந்த இந்தத் திருமணம் குறித்த காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, உரவகொண்டா காவலர்கள் சிறுமிக்கு தாலி கட்டிய வாலிபரையும் அவருடைய உறவினர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.