புதுடெல்லி: அந்தமான், நிக்கோபார் தீவுகளில் பெயர் சூட்டப் படாமல் உள்ள 21 தீவுகளுக்கு 'பரம்வீர் சக்ரா' விருது பெற்ற வர்களின் பெயர்களைக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நேற்று பெயர் சூட்டினார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஷின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ஜனவரி 23ஆம் தேதியன்று பராக்கிரம தினமாக (பராக்ரம் திவாஸ்) கொண்டாடப் படுகிறது.
2018 ஜனவரி வரை 21 பேர் 'பரம்வீர் சக்ரா' விருதினைப் பெற்றுள்ளனர். 20 பேர் இந்திய ராணுவத்தில் இருந்தும் ஒருவர் இந்திய விமானப்படையில் இருந்தும் இவ்விருதினை பெற்றுள்ளனர்.

