மரபுமீறாத கேரள ஆளுநர்: அரசு உரையை அப்படியே வாசித்தார்

திரு­வ­னந்தபுரம்: கேரள சட்­டப்­பே­ர­வைக் கூட்­டத்­தொ­ட­ரின் தொடக்­கத்­தில் உரை­யாற்­றிய அம்­மா­நில ஆளு­நர் ஆரிஃப் முக­மது கான், அரசு தயா­ரித்­துக் கொடுத்த உரையை எந்த மாற்­ற­மும் இன்றி அப்­ப­டியே வாசித்­துள்­ளார்.

தமி­ழ­கத்­தைப் போலவே கேர­ளா­வி­லும் அம்­மா­நில அர­சுக்­கும் ஆளு­ந­ருக்­கும் இடையே மோதல் போக்கு நிலவி வரு­கிறது.

எனி­னும் ஆளு­நரிடம் அளிக்கப்பட்ட உரை­யில் எந்த மாற்­ற­மும் செய்யப்படாத­தால் பிரச்­சினை ஏதும் வெடிக்­க­வில்லை.

அண்­மை­யில் தமி­ழக சட்­டப்­பே­ர­வை­யில் உரை­யாற்­றிய ஆளு­நர் ஆர்.என்.ரவி, மாநில அரசு தயார் செய்து கொடுத்த உரை­யில் சில மாற்­றங்­க­ளைச் செய்­த­தா­க ஆளும்­த­ரப்பு புகார் எழுப்­பி­யது. இதை­ய­டுத்து பேர­வை­யில் இருந்து வழக்­கத்­துக்கு மாறாக முன்­கூட்­டியே வெளி­யே­றி­னார் ஆளு­நர்.

இந்­நி­லை­யில், கேரள சட்­டப்­பே­ர­வை­யின் பட்­ஜெட் கூட்­டத்­தொ­டர் தொடங்கி உள்­ளது. மர­புப்­படி இத்­தொ­ட­ரின் துவக்க நிகழ்­வாக அம்­மா­நில ஆளு­நர் ஆரிஃப் முக­மது கான் உரை­யாற்­றி­னார்.

கேர­ளா­வில் உள்ள பல்­கலைக்­க­ழ­கங்­க­ளின் நிர்­வா­கம், அவற்­றில் செய்­யப்­படும் நிய­ம­னங்­கள் தொடர்­பாக ஆளு­நர் தனது எதிர்ப்பை அவ்­வப்­போது பதிவு செய்து வரு­கி­றார். இது­கு­றித்து பேர­வை­யில் உரை­யாற்­றும்­போது அவர் குறிப்­பிட வாய்ப்­புள்­ள­தா­கக் கரு­தப்­பட்­டது. ஆனால் அவ்­வாறு ஏதும் நிக­ழ­வில்லை.

மாறாக மத்திய அரசை விமர்சிக்கும் வரிகளை ஆளுநர் ஆரிஃப் முகமது கான் எந்த மாற்றமும் இன்றி அப்படியே வாசித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!