பாலத்தில் இருந்து பணமழை

பாலத்தில் இருந்து பணமழை

1 mins read
b97915c3-9b12-4ce5-96ae-ed4469b4a0c1
-

பெங்­களூரு: மேம்­பா­லத்­தில் இருந்து ஒரு­வர் ரூபாய் நோட்­டு­களை வீசி­யெ­றிந்த சம்­ப­வம் பெங்­க­ளூ­ரில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

நேற்று காலை பெங்­க­ளூ­ரின் கேகே சந்­தைப் பகு­தி­யில் உள்ள மேம்­பா­லத்­தில் நின்று ஓர் ஆட­வர் பத்து ரூபாய் நோட்­டு­களை கொத்துக் கொத்­தாக வீசி­னார்.

இதைக் கண்ட பொது­மக்­கள் அந்­நோட்­டு­களை அள்­ளி­யெ­டுக்க திர­ளா­கக் கூடி­னர். இத­னால் அங்கு போக்­கு­வ­ரத்து நிலை­குத்­தி­யது. அந்த ஆட­வர் எதற்­காக இவ்­வாறு செய்­தார் எனத் தெரி­ய­வில்லை.

பின்­னர் அவர் வீசிய ரூபாய் நோட்­டு­க­ளின் மொத்த மதிப்பு ரூ.3 ஆயி­ரம் எனத் தெரி­ய­வந்­தது. இதை­ய­டுத்து அந்த ஆட­வரை தேடிக்­கண்­டு­பி­டித்து காவல்­து­றை­யி­னர் விசா­ரணை மேற்­கொண்­ட­னர். அவர் மன­ந­லம் பாதிக்­கப்­பட்­ட­வ­ராக இருக்­கக்­கூ­டும் என அவர்­கள் தெரி­வித்­த­னர்.

ஆட­வர் ரூபாய் நோட்­டு­களை வீசி­யது தொடர்­பான காணொளி சமூக ஊட­கங்­களில் பதி­வேற்­றப்­பட்ட சில நிமி­டங்­களில் அதை ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் பார்த்­துள்­ள­னர்.