தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காரில் 8 கி.மீ. இழுத்துச் செல்லப்பட்ட முதியவர் மரணம்

1 mins read
ca3af5f9-c145-494f-85b1-98f5ef29ffe7
அந்­தக் கார் காவல்­து­றை­யால் பறி­மு­தல் செய்­யப்­பட்ட நிலை­யில், ஓட்­டு­ந­ருக்கு வலை­வீ­சப்­பட்­டுள்­ளது. படம்: பிக்ஸாபே -

பாட்னா: பீகார் மாநி­லத்­தில் எழு­பது வயது முதி­ய­வர் மீது மோதிய கார் நிற்­கா­மல் சென்­ற­தில் அவர் எட்டு கிலோ மீட்­டர் தூரம் இழுத்­துச் செல்­லப்­பட்­டார். பின்­னர் அந்­த கார் அவர் மீது ஏறி­ய­தில் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­தார்.

அண்­மை­யில் டெல்­லி­யி­லும் இரு சக்­கர வாக­னத்­தில் சென்ற பெண் மீது கார் மோதி­ய­தில், அதன் கீழ்ப்­ப­கு­தி­யில் சிக்­கிய அவர் சில கிலோ­மீட்­டர் தூரம் இழுத்­துச் செல்­லப்­பட்­ட­தில் உயி­ரிழ்ந்த கொடூ­ரம் அரங்­கே­றி­யது.

பீகா­ரில் உள்ள சம்­ப­ரான மாவட்­டத்­தைச் சேர்ந்த சங்­கர் சவு­தார் என்ற முதி­ய­வர் நேற்று முன்­தி­னம் தனது கிரா­மத்­துக்கு அருகே உள்ள நெடுஞ்­சா­லையை மிதி­வண்­டி­யில் கடக்க முயன்­றார்.

அப்­போது வேக­மாக வந்த கார் ஒன்று, அவர் மீது மோதி­யது. இதில் காரின் முன்­ப­கு­தி­யில் விழுந்த முதி­ய­வர் சங்­கர் சவு­தார், முன்­கண்­ணா­டி­யில் உள்ள துடைப்­பான்­க­ளைப் (வைப்­பர்) பிடித்­துக்­கொண்டு, காரை நிறுத்­தும்­படி கூச்­ச­லிட்­டுள்­ளார்.

இந்த விபத்தை நேரில் கண்ட சிலர் முதி­ய­வ­ரைக் காப்­பாற்ற விரைந்­த­னர். ஆனால் கார் ஓட்­டு­நரோ, காரை நிறுத்­தா­மல் வேக­மாக ஓட்­டிச் சென்­றுள்­ளார்.

சில கிலோ மீட்­டர் தூரம் சென்­ற­தும் ஓட்­டு­நர் திடீ­ரென காரை நிறுத்த, முதி­ய­வர் தூக்கி வீசப்­பட்­டார். தன்னை சிலர் பின்­தொ­டர்­வ­தைக் கண்ட ஓட்­டு­நர், காரை மீண்­டும் இயக்­கி­ய­போது, சாலை­யில் விழுந்து கிடந்த முதி­ய­வர் மீது அது ஏறிச்­சென்­றது. இதில் முதி­ய­வர் சங்­கர் அந்த இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தார்.

அந்­தக் கார் காவல்­து­றை­யால் பறி­மு­தல் செய்­யப்­பட்ட நிலை­யில், ஓட்­டு­ந­ருக்கு வலை­வீ­சப்­பட்­டுள்­ளது.