திருவனந்தபுரம்: பிரதமர் மோடி குறித்து பிபிசி ஊடகம் வெளியிட்ட ஆவணப் படத்தை திரையிடுவது தொடர்பாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மோதல் வெடித்தது.
தடையை மீறி ஒரு தரப்பினர் ஆவணப் படத்தை திரையிட முயன்றபோது, பல்கலைக்கழக வளாகத்தில் மின்சாரம், இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது. எனினும் மாணவர்களில் சிலர், தங்கள் கைப்பேசியில் ஆவணப் படத்தைப் பார்க்க முயன்றபோது அவர்கள் மீது கற்கள் வீசப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
தாக்குதலைக் கண்டித்து மாணவர்கள் பலர் அருகிலுள்ள காவல் நிலையத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அடுத்து பல்கலை வளாகத்திற்கு வெளியே காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, பிபிசி ஆவணப் படத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணியின் மகன் ்அனில் அந்தோணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்தும் அவர் விலகி உள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தமக்கு ஏராளமான மிரட்டல் அழைப்புகள் வந்ததாக அனில் அந்தோணி கூறினார்.

