பாகிஸ்தானுக்கு திடீர் அழைப்பு விடுத்த இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்கலாம்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் நடை­பெ­றும் ஷாங்­காய் ஒத்­து­ழைப்பு அமைப்­பின் வெளி­யு­றவு அமைச்­சர்­கள் கூட்­டத்­தில் பங்­கேற்க வரு­மாறு பாகிஸ்­தா­னுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தியா உட­னான மூன்று போர்­க­ளின் மூலம் பாகிஸ்­தான் பாடம் கற்­றுக்கொண்­டுள்­ளது என்­றும் இரு தரப்­புக்­கும் இடையே அமைதி நிலவ வேண்­டும் என விரும்­பு­வதா­க­வும் பாகிஸ்­தான் பிர­த­மர் ஷேபாஸ் ஷெரீஃப் அண்­மை­யில் தெரி­வித்­தி­ருந்­தார்.

இத்­த­கைய சூழ­லில் கோவா­வில் நடை­பெ­றும் கூட்­டத்­தில் பங்­கேற்க வரு­மாறு பாகிஸ்­தான் வெளி­யு­றவு அமைச்­சர் பிலா­வல் பூட்டோ சர்­தா­ரிக்கு இஸ்­லா­மா­பாத்­தில் உள்ள இந்­தி­ய தூத­ர­கம் மூலம் அழைப்பு விடுக்­கப்­பட்­ட­தாக இந்­திய ஊட­கச் செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கடந்த 12 ஆண்­டு­க­ளாக பாகிஸ்­தான் வெளி­ய­றவு அமைச்சர் பொறுப்­பில் இருந்த யாரும் இந்­தி­யா­வுக்குப் பய­ணம் மேற்­கொள்­ள­வில்லை.

ஷாங்­காய் ஒத்­து­ழைப்பு அமைப்­பில் கஜ­கஸ்­தான், கிர்கிஸ்­தான், தஜி­கிஸ்­தான், உஸ்­பெ­கிஸ்­தான் ஆகிய நாடு­களும் இடம்­பெற்­றுள்­ளன.

இந்­நி­லை­யில், சீனா­வும் ரஷ்யா­வும் பங்­கேற்க உள்ள கூட்­டத்­தில் பங்­கேற்க வரு­மாறு இந்­தியா விடுத்­துள்ள அழைப்பு உலக நாடு­க­ளின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது.

இந்த அழைப்பானது அனைத்­து­லக அர­சி­யல் அரங்­கில் மிகுந்த முக்­கி­யத்­து­வம் பெற்­றுள்­ள­தாக துறைசார் நிபு­ணர்­கள் கருது­கின்­ற­னர்.

அணு ஆயு­தப் போர்:

போம்­பியோ அதிர்ச்­சித் தக­வல்

இதற்­கிடையே, கடந்த 2019ஆம் ஆண்டு நில­விய சூழ­லில் இந்­தி­யா­வும் பாகிஸ்­தா­னும் அணு ஆயு­தப் போரில் ஈடு­பட தயார் நிலை­யில் இருந்­த­தாக அமெ­ரிக்க முன்­னாள் வெளி­யுறவு அமைச்­சர் மைக் போம்­பியோ தெரி­வித்­துள்­ளார்.

அவர் எழு­தி­யுள்ள புத்­த­கத்­தில் இத்­த­க­வல் இடம்­பெற்­றுள்­ளது.

காஷ்­மீ­ரின் புல்­வாமா பகு­தி­யில் இந்­திய பாது­காப்­புப் படை­யினர் மீது பயங்­க­ர­வா­தி­கள் தாக்கு­தல் நடத்­தி­னர். இதில் இந்­திய வீரர்­கள் பலர் கொல்­லப்­பட்­ட­தால் இந்­தியா கடும் ஆவே­ச­ம­டைந்­தது.

"இதை­ய­றிந்து அன்­றைய இந்­திய வெளி­யு­றவு அமைச்­ச­ரான சுஷ்மா சுவ­ராஜை நான் தொடர்­பு­கொண்டு பேசி­ய­போது, இந்­தியா மீது பாகிஸ்­தான் அணு­ஆ­யுத தாக்­கு­தல் நடத்த திட்­ட­மிட்­டுள்­ள­தாக தக­வல் கிடைத்­துள்­ளது என்­றும் இந்­தி­யா­வும் உரிய நட­வ­டிக்கை எடுக்­கும் என்­றும் கூறி­னார்.

"எனக்கு ஓரிரு நிமி­டங்­கள் தரு­மாறு கேட்­டுக்­கொண்­டேன். பின்­னர் பாகிஸ்­தான் ராணு­வத் தள­ப­தி­யு­டன் பேசி­ய­போது அணு ஆயு­தப் போர் நடத்­தும் எண்­ண­மில்லை என்­றார்.

"இரு தரப்­புமே அணு ஆயு­தப் போரை நடத்­தும் எண்­ணம் கொண்­டி­ருக்­க­வில்லை என்­பதைப் புரிய வைக்க எனக்கு சில மணி நேரம் தேவைப்­பட்­டது," என மைக் போம்­பியோ தாம் எழுதியுள்ள புத்தகத்தில் தெரி­வித்­துள்­ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!