கோத்ரா கலவர வழக்கு; குற்றம்சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை

அக­ம­தா­பாத்: கோத்ரா கல­வர வழக்­கில் குற்­றம்­சாட்­டப்­பட்ட 22 பேரை­யும் குஜ­ராத் நீதி­மன்­றம் விடு­தலை செய்­துள்­ளது.

உரிய ஆதா­ரங்­கள் இல்­லா­த­தால் குற்­றம்­சாட்­டப்்­பட்­ட­வர்­கள் விடு­விக்­கப்­பட்­ட­தாக நீதி­மன்ற உத்­த­ர­வில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு குஜ­ராத்­தில் பெரும் கல­வ­ரம் வெடித்­தது. கோத்ரா பகு­தி­யில் கல­வ­ரத்­துக்­குப் பிற­கும் நீடித்த வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளின்­போது இரு குழந்­தை­கள் உட்­பட 17 பேர் கொல்­லப்­பட்­ட­னர்.

இது தொடர்­பாக அம்­மா­நில காவல்­துறை 22 பேரை கைது செய்­தது. இந்த வழக்­கின் விசா­ரணை பஞ்­ச­மால் மாவட்ட நீதி­மன்­றத்­தில் நடை­பெற்று வந்த நிலை­யில், நேற்று முன்­தி­னம் தீர்ப்பு வழங்­கப்­பட்­டது.

குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வர்­கள் தங்­க­ளுக்கு எதி­ரான ஆதா­ரங்­களை அழிக்­கும் நோக்­கில் சில நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­தாக அர­சுத்­த­ரப்பு குற்­றம்­சாட்டி இருந்­தது.

குறிப்­பாக 2002, பிப்­ர­வரி 28ஆம் தேதி கொலை செய்­யப்­பட்­ட­வர்­க­ளின் உடல்­களை குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வர்­கள் எரித்­து­விட்­ட­தாக நீதி­மன்­றத்­தில் குறிப்­பி­டப்­பட்­டது.

ஆனால் தங்­க­ளுக்கு எதி­ரான ஆதா­ரங்­களை அர­சுத்­த­ரப்பு நீதி­மன்­றத்­தில் அளிக்­க­வில்லை என்­றும் குற்­றச்­சாட்டை நிரூ­பிக்க தேவைப்­படும் சாட்­சி­களும் இல்லை என குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வர்­கள் தரப்­பில் வாதி­டப்­பட்­டது.

கல­வ­ரம் நடந்து முடிந்த இரண்டு ஆண்­டு­க­ளுக்­குப் பிற­கு­தான் 22 பேரை காவல்­துறை கைது செய்து வழக்கு தொடுக்­கப்­பட்­ட­தா­க­வும் இறந்­த­வர்­க­ளின் உடல்­கள் கிடைக்­கா­த­போது 22 பேரை­யும் குற்­ற­வா­ளி­கள் என்று குறிப்­பி­டு­வதை ஏற்க இய­லாது என்ற வாத­மும் முன்­வைக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து உரிய ஆதா­ரங்­கள் இல்­லா­த­தால் 22 பேரை­யும் விடு­தலை செய்­வ­தாக வழக்கை விசா­ரித்த நீதி­பதி தீர்ப்­ப­ளித்­தார். குற்­றம்­சாட்­டப்­பட்ட 22 பேரில் எட்டு பேர் வழக்கு விசா­ரணை நடந்து கொண்­டி­ருந்­த­போது கால­மா­கி­விட்­ட­னர்.

கடந்த 2002ஆம் ஆண்டு சபர்­மதி விரைவு ரயி­லின் சில பெட்­டி­க­ளுக்கு சிலர் தீ வைத்­த­னர். இதில் 59 பய­ணி­கள் உடல் கருகி உயி­ரி­ழந்­த­னர். இதை­ய­டுத்து குஜ­ராத்­தில் பெரும் கல­வ­ரம் வெடித்­தது.

அப்­போது கோத்ரா பகு­தி­யில் நிகழ்ந்த வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளின்­போது ஏரா­ள­மான சிறு­பான்­மை­யி­னர் படு­கொலை செய்­யப்­பட்­ட­னர்.

திலோல் எனும் கிரா­மத்­தில் சிறு­பான்மை சமூ­கத்­தைச் சேர்ந்த 17 பேர் கொல்­லப்­பட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!