ஜெய்ப்பூர்: பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் நடைபெற்றுள்ள திருமணம் பலரையும் வியக்க வைத்துள்ளது.
ராஜஸ்தானின் முன்னாள் எம்எல்ஏ பத்ரி ராம் ஜாக்கரின் பேரன் ராம் பிரகாஷுக்கும் வெளிநாடுவாழ் இந்தியத் தொழிலதிபர் நாவல் கிஷோரின் மகள் ரிதுவுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.
இதற்காக அங்குள்ள பார்மரின் பின்யாட் என்ற கிராமமே ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள கோட்டை போல் மணக்கோலம் பூண்டிருந்தது.
பல கோடி ரூபாயைத் தண்ணீர் போல் செலவழித்து செய்யப்பட்டிருந்த திருமணத்துக்கு 10,000 பேர் திரண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆயிரக் கணக்கான மரங்களுடன் 300 கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விருந்தினர்களுக்காக ஹெலிபேட், பல சாலைகளும் அமைக்கப்பட்டிருந்தன.

