மத்திய அரசு: கொவிட்-19 தடுப்பூசியை மாற்றி மாற்றிப் போட முடியாது பயன்பாட்டுக்கு வந்தது நாசி வழி தடுப்பு மருந்து மாறுபட்ட தடுப்பூசிக்கு அனுமதி இல்லை

மத்திய அரசு: கொவிட்-19 தடுப்பூசியை மாற்றி மாற்றிப் போட முடியாது பயன்பாட்டுக்கு வந்தது நாசி வழி தடுப்பு மருந்து மாறுபட்ட தடுப்பூசிக்கு அனுமதி இல்லை

2 mins read
a371a7eb-66b2-4939-b0df-184b9ad50080
-
Google News Preferred Icon

புதுடெல்லி: முதல்முறையாக கொவிஷீல்ட் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது முறையாக கோவாக்சின் செலுத்த அனுமதி இல்லை என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மதுர் மிட்டல் என்பவர், கடந்த 2021ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், "முதல் தவணையாக போட்டுக்கொண்ட கொவிஷீல்ட் தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்பட்டன. எனவே, இரண்டாவதாக கோவாக்சின் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள அனுமதிக்கும்படி உத்தரவிடவேண்டும்," எனக் கோரியிருந்தார். இந்நிலையில், இம்மனு நீதிபதி பிரதிபா எம்.சிங் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, "தடுப்பூசியை மாற்றிப்போடுவது தொடர்பான நான்காவது சோதனை இன்னும் முடியாததால், அனுமதி வழங்கமுடியாது," என மத்திய அரசு வழக்கறிஞர் கூறினார்.

புது­டெல்லி: ஹைத­ரா­பாத்­தின் பாரத் பயோ­டெக் நிறு­வ­னம் தயாரித்துள்ள 'இன்­கோ­வாக்' என்ற நாசி (மூக்கு) வழி போடப்­படும் கொரோனா தடுப்பு மருந்து மக்­க­ளின் பயன்­பாட்­டுக்கு வந்­துள்­ளது.

மத்­திய சுகா­தார அமைச்­சர் மான்­சுக் மாண்­ட­வியா, அறி­வியல், தொழில்­நுட்­பத் துறை அமைச்­சர் ஜிதேந்­திர சிங் ஆகி­யோர் இந்­தத் தடுப்பு மருந்தை டெல்­லி­யில் நேற்று முன்­தி­னம் அறி­மு­கப்­ப­டுத்­தி­னர்.

ஊசி­யின்றி, வலி­யின்றி நாசி யில் 'ஸ்பிரே' போல் அடித்­துக்­கொள்­ளக்­கூ­டிய இந்த 'இன்­கோ­வாக்' தடுப்பு மருந்தை 18 வயது முதல் அதற்கு மேலா­னோர் வரை கூடு­தல் தடுப்­பூசியாக பயன் படுத்திக் ­கொள்­ள­லாம்.

கொவி­ஷீல்ட், கோவாக்­சின் தடுப்­பூ­சியை இருமுறை போட்­டுக்­கொண்டு கூடு­தல் தடுப்­பூசி போடா­த­வர்­கள் இந்த நாசி வழி தடுப்பு மருந்தை போட்டுக்­கொள்ள­லாம் என்­றும் இத­னால் நோயெ­திர்ப்­புச் சக்தி அதி­க­ரிக்­கும் என்­றும் பரி­சோ­தனை முடி­வு­கள் தெரி­வித்­துள்­ளன.

இம்மருந்து தனி­யாருக்கு ரூ.800க்கும் மத்­திய, மாநில அர­சு­க­ளுக்கு ரூ.325க்கும் விற்­பனை செய்­யப்­படும் என பாரத் பயோ­டெக் நிறு­வ­னம் கூறியுள்ளது.