பயிற்சியின்போது விமானங்கள் மோதல்; விமானி உயிரிழப்பு

பயிற்சியின்போது விமானங்கள் மோதல்; விமானி உயிரிழப்பு

1 mins read
f36ab226-4a8e-4229-804e-c0d1dd256b5d
-

போபால்: இந்­திய விமா­னப் படைக்குச் சொந்­த­மான இரு போர் விமா­னங்­கள் பயிற்­சி­யின்­போது விபத்­துக்குள்­ளா­ன­தில் விமானி ஒரு­வர் உயி­ரி­ழந்­து­விட்ட­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

நேற்று காலை விமா­னப் படை­யின் விமா­னங்­கள் வழக்­க­மான பயிற்­சி­யில் ஈடு­பட்­டி­ருந்­த­போது விபத்து நிகழ்ந்­துள்­ளது.

மத்­தியப் பிர­தேச மாநி­லத்­தின் குவா­லி­யர் நகர விமான நிலை­யத்­தில் இந்­திய விமா­னப் படை­யின் விமானத் தளம் அமைந்­துள்­ளது. நேற்று காலை அங்­கி­ருந்து இரண்டு விமா­னங்­களில் மூன்று விமா­னி­கள் பயிற்­சிக்­கா­கப் புறப்­பட்­டுச் சென்­ற­னர்.

சுகோய்-30, மிராஜ்-2000 வகை போர் விமா­னங்­கள் இந்­தப் பயிற்­சி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டன.

இந்­நி­லை­யில், நடு­வா­னில் பயிற்­சி­யில் ஈடு­பட்டிருந்­த­போது, அவ்­விரு விமா­னங்­களும் எதிர்­பாராத வித­மாக ஒன்­றோடு ஒன்று மோதி விபத்­துக்­குள்­ளா­கின.

கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் இரு விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மற்றொரு விமானி உயிரிழந்துவிட்டார். அவரது உடல் பாகங்கள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து இந்திய விமானப்படைத் தலைவர், மத்திய தற்காப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் விளக்கமளித்ததாகவும் மீட்புப் பணிகள் குறித்து அறிக்கை அளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில் விபத்துக்குள்ளான போர் விமானங்களின் சிதைவுகள் விபத்து நடந்த இடத்திலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் ராஜஸ்தானின் பரத்பூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.