அத்துமீறும் சீனா; எச்சரிக்கும் ஆய்வறிக்கை

அத்துமீறும் சீனா; எச்சரிக்கும் ஆய்வறிக்கை

1 mins read
484bf5b3-e71a-4c4e-9302-b974845f1b03
-

புது­டெல்லி: எல்­லைப் பகு­தி­களில் சீன ராணு­வம் தொடர் கட்­டு­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தா­க­வும் இத­னால் இரு நாடு­க­ளுக்கு இடை­யே­யான மோதல் தீவி­ர­ம­டை­யும் என்­றும் லடாக் காவல்­து­றை­யின் ஆய்­வ­றிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இந்த ஆய்­வ­றிக்கை அண்­மை­யில் பிர­த­மர் நரேந்­திர மோடி­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

இந்­தியா, சீன இடை­யே­யான எல்­லைப் பகு­தி­யா­னது ஏறத்­தாழ 3,500 கிலோ மீட்­டர் தூரம் நீள்­கிறது. குறிப்­பிட்ட எல்­லைப் பகுதி­கள் பதற்­ற­மா­ன­வை­யாக அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளன. அப்­பகு­தி­களில் சீன ராணு­வத்­தி­னர் அவ்­வப்­போது ஊடு­ருல் முயற்­சி­களில் ஈடு­ப­டு­வ­தும் இந்­திய ராணு­வம் அதை முறி­ய­டிப்­ப­தும் வாடிக்­கை­யாக உள்­ளது.

அந்த வகை­யில் லடாக் எல்­லை­யி­லும் அத்­து­மீ­றல்­கள் உள்­ளன. இந்­நி­லை­யில், லடாக் எல்­லை­யில் சீன ராணு­வம் தனது கட்­ட­மைப்பை தொடர்ந்து மேம்­படுத்தி வரு­வ­தாக லடாக் காவல் துறை­யின் ஆய்­வ­றிக்கை தெரி­விக்­கிறது.

கடந்த கால மோதல்­கள், எல்­லைப் பகு­தி­யின் தற்­போ­தைய நிலை உள்­ளிட்ட பல்­வேறு அம்­சங்­க­ளை­யும் உள்­ள­டக்கி இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.