18,000 அடி உயரத்தில் உண்ணாவிரதப் போராட்டம்

18,000 அடி உயரத்தில் உண்ணாவிரதப் போராட்டம்

1 mins read
036aaee9-cfe0-455a-af7e-90a91b7c0c32
-

ஸ்ரீந­கர்: காஷ்­மீ­ரின் லடாக் பகு­தி­யில் சுற்­றுச்­சூ­ழ­லைப் பாது­காக்க உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வலி­யு­றுத்தி சோனம் வாங்­ (படம்) என்ற சமூக ஆர்­வ­லர் ஐந்து நாள் உண்­ணா­வி­ர­தப் போராட்­டம் மேற்­கொண்­டுள்­ளார்.

கடல் மட்­டத்­தில் இருந்து ஏறத்­தாழ 18,000 அடி உய­ரத்­தில் கார்­டங் லா என்ற பகு­தி­யில், மைனஸ் 40 டிகிரி செல்­சி­யஸ் குளி­ரில், குடி­ய­ரசு தினத்­தன்று அவர் தனது போராட்­டத்தை தொடங்கி உள்­ளார்.

அறி­வி­யலோ, தொழில்­நுட்­பமோ பரு­வ­நிலை மாறு­பாட்­டின் விளைவு­க­ளைச் சரிசெய்ய இய­லாது என்­றும் இந்­திய மலை­கள், நதி­கள், வனப்­ப­கு­தி­களைப் பாது­காக்க நாட்டு மக்­கள் ஒன்றிணைய வேண்­டும் என்­றும் சோனம் வலி­யு­றுத்தி உள்­ளார்.