ஸ்ரீநகர்: காஷ்மீரின் லடாக் பகுதியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி சோனம் வாங் (படம்) என்ற சமூக ஆர்வலர் ஐந்து நாள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார்.
கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாழ 18,000 அடி உயரத்தில் கார்டங் லா என்ற பகுதியில், மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் குளிரில், குடியரசு தினத்தன்று அவர் தனது போராட்டத்தை தொடங்கி உள்ளார்.
அறிவியலோ, தொழில்நுட்பமோ பருவநிலை மாறுபாட்டின் விளைவுகளைச் சரிசெய்ய இயலாது என்றும் இந்திய மலைகள், நதிகள், வனப்பகுதிகளைப் பாதுகாக்க நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் சோனம் வலியுறுத்தி உள்ளார்.

