ரசிகர்களுக்கு காற்றில் இருந்து தண்ணீர்

ரசிகர்களுக்கு காற்றில் இருந்து தண்ணீர்

1 mins read
980da49c-e267-44c6-8af2-b0f0cf9e684e
-

புவனேஸ்வர்: ஒடிசாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண ஹாக்கி போட்டியைக் காண வந்த ரசிகர்களுக்கு காற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது.

இதற்கான கருவிகள் போட்டி நடைபெற்ற விளையாட்டு அரங்குகளில் வைக்கப்பட்டிருந்தன.

இதன் மூலம் நிலத்தடி நீர் மிச்சமாகும் என்றும் காற்றில் உள்ள மாசு குறையும் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.

தங்களின் இந்த ஏற்பாடு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருப்பதாக இந்திய ஹாக்கி சம்மேளனம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.