துப்பாக்கிச்சூடு: உயிருக்குப் போராடும் ஒடிசா அமைச்சர்

புவ­னேஸ்வர்: மாநில சுகா­தார அமைச்­சர் நபா கிஷோர் தாஸ் மீது நடத்­தப்­பட்ட துப்­பாக்­கிச் சூடு கார­ண­மாக ஒடி­சா­வில் பதற்­றம் நிலவி வரு­கிறது.

அவரை அம்­மா­நி­லக் காவல்­துறை­யின் உதவி ஆய்­வா­ளர் ஒரு­வர் இரு­முறை துப்­பாக்­கி­யால் சுட்­டார். இதை­ய­டுத்து உயி­ருக்கு ஆபத்­தான நிலை­யில் அமைச்­சர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார்.

முதல்­வர் நவீன் பட்­நா­யக் தலை­மை­யி­லான ஒடிசா மாநில அர­சில் சுகா­தா­ரம், குடும்ப நலத்­துறை அமைச்­ச­ராக பொறுப்பு வகித்து வரும் நபா கிஷோர் தாஸ். பிஜு ஜனதா தளம் கட்­சி­யின் மூத்த தலை­வ­ரா­வார்.

நேற்று ஜார்­சு­குடா மாவட்­டத்­தில் நடை­பெற இருந்த சில நிகழ்ச்­சி­களில் பங்­கேற்க அங்கு சென்­றி­ருந்­தார் நபா கிஷோர் தாஸ். அங்கு தனது காரில் இருந்து இறங்­கிய அவர் மீது திடீ­ரென துப்­பாக்­கிச் சூடு நடத்­தப்­பட்­டது.

ஒடிசா காவல்­து­றை­யில் உதவி ஆய்­வா­ள­ரா­கப் பணி­யாற்றி வரும் கோபால் தாஸ் என்­ப­வர் அமைச்­ச­ருக்கு மிக அரு­கில் சென்று துப்­பாக்­கி­யால் சுட்­டார்.

இதில் அமைச்­ச­ரின் நெஞ்­சில் இரு குண்­டு­கள் பாய்ந்­தன. ரத்த வெள்­ளத்­தில் சாய்ந்து, மயக்­க­மடைந்த அமைச்­சரை உட­ன­டி­யாக அரு­கி­லுள்ள மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­த­னர்.

பின்­னர் அங்­கி­ருந்து விமா­னம் மூலம் தலை­ந­கர் புவ­னேஸ்­வ­ருக்குக் கொண்டு செல்­லப்­பட்ட அவர் தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவ­ரது நிலைமை கவ­லைக்­கி­ட­மாக உள்­ளது என்­றும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!