இந்தியர்களுக்கு அதிக விசா வழங்க அமெரிக்கா முடிவு

இந்தியர்களுக்கு அதிக விசா வழங்க அமெரிக்கா முடிவு

1 mins read
7853ca33-e276-491d-9a94-ea8054b3565f
-

புது­டெல்லி: நடப்­பாண்­டில் இந்­தியர்­க­ளுக்கு அதிக எண்­ணிக்கை­யி­லான விசாக்­கள் வழங்­கப்­படும் என அமெ­ரிக்கா அறி­வித்­துள்­ளது.

மேலும், இந்­தி­யா­வில் உள்ள அமெ­ரிக்க தூத­ரக அலு­வ­ல­கங்­கள் இனி சனிக்­கி­ழ­மை­க­ளி­லும் திறந்­தி­ருக்­கும் என்­றும் விசா நடை­முறை துரி­தப்­படுத்தப்­படும் என்­றும் மும்­பை­யில் உள்ள அமெ­ரிக்க தூத­ர­கத் தலை­வர் ஜான் பல்­லார்ட் தெரிவித்தார்.

இதற்­காக கூடு­தல் அதி­கா­ரி­கள் நிய­மிக்­கப்­ப­டு­வர் என்­றார் அவர். இந்­தி­யா­வில் உள்ள அமெ­ரிக்க தூத­ர­கம் கடந்த ஆண்­டில் எட்டு லட்­சம் விசா­வுக்கு ஒப்­பு­தல் அளித்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்­டுள்ள ஜான் பல்­லார்ட், அவற்­றுள் கல்­விக்­கான விசாக்­கள் மட்­டும் ஏறத்­தாழ 125,000ஆக இருக்­கும் எனச் சுட்­டிக்­காட்­டி­னார்.

"இந்த ஆண்­டில் இன்­னும் அதிக விசாக்­க­ளுக்கு ஒப்­பு­தல் அளிக்கத் திட்­ட­மிட்­டுள்­ளோம். விசாவுக்கான காத்­தி­ருப்­புக் காலம் குறைக்­கப்­ப­டு­கிறது," என்­றார் ஜான் பல்­லார்ட்.