புதுடெல்லி: நடப்பாண்டில் இந்தியர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான விசாக்கள் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
மேலும், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகங்கள் இனி சனிக்கிழமைகளிலும் திறந்திருக்கும் என்றும் விசா நடைமுறை துரிதப்படுத்தப்படும் என்றும் மும்பையில் உள்ள அமெரிக்க தூதரகத் தலைவர் ஜான் பல்லார்ட் தெரிவித்தார்.
இதற்காக கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்படுவர் என்றார் அவர். இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் கடந்த ஆண்டில் எட்டு லட்சம் விசாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஜான் பல்லார்ட், அவற்றுள் கல்விக்கான விசாக்கள் மட்டும் ஏறத்தாழ 125,000ஆக இருக்கும் எனச் சுட்டிக்காட்டினார்.
"இந்த ஆண்டில் இன்னும் அதிக விசாக்களுக்கு ஒப்புதல் அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். விசாவுக்கான காத்திருப்புக் காலம் குறைக்கப்படுகிறது," என்றார் ஜான் பல்லார்ட்.

