'பழங்குடியினர் பத்ம விருதுகள் பெற்றதில் நாட்டுக்குப் பெருமை'

'பழங்குடியினர் பத்ம விருதுகள் பெற்றதில் நாட்டுக்குப் பெருமை'

1 mins read
d64a688e-ff4b-474a-aef8-bce74a7d92c8
-

புது­டெல்லி: பழங்­கு­டி­யி­னர் வாழ்க்கை, நகர வாழ்க்­கை­யில் இருந்து வேறு­பட்­டது என்­றும் அதற்­கென்று சொந்த சவால்­களைக் கொண்­டுள்­ளது என்­றும் பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

நேற்று வானொலி மூலம் நாட்டு மக்­க­ளி­டையே உரை­யாற்­றிய அவர், பழங்­குடி சமூ­கத்­தினரும் அவர்களுடன் தொடர்­பில் உள்­ள­வர்­களும் அதிக அள­வில் பத்ம விரு­து­க­ளைப் பெற்­றது நாட்டுக்குப் பெருமை தரக்­கூ­டிய விஷ­யம் என்றார் பிரதமர்.

"ஒடி­சா­வில், சிறு­தா­னிய இயக்­கத்­தின் ஒரு பகு­தி­யாக சுந்­தர்­கார் என்ற பழங்­குடி மாவட்­டத்­தின் மக­ளிர் சுய உதவி குழு ஒன்று பிஸ்­கட்­டு­கள், கேக்­கு­கள், உண்­ப­தற்­கான பிற பொருள்­களை சிறு­தா­னி­யங்­களில் இருந்து உரு­வாக்கி வரு­கின்­ற­னர்," என்­றார் பிர­த­மர் மோடி. ஏறத்­தாழ 1,500 பெண்­கள் இந்­தப் பணி­யில் ஈடு­பட்டு உள்­ள­தா­க­அப்­பெண்­க­ளின் வரு­வாய் அதி­க­ரித்துள்­ளது என்­றும் பிர­த­மர் கூறினார்.

"தமி­ழ­கத்­தின் உத்­தி­ர­மே­ரூ­ரில் உள்ள கல்­வெட்­டு­கள் உல­கம் முழு­வ­தை­யும் வியக்க வைத்­துள்­ள­து. 1,200 ஆண்­டு­க­ளுக்கு முந்­தைய அக்­கல்­வெட்­டு­களில் அர­சி­ய­ல­மைப்பு பற்றி குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. கிராம சபை­களை எப்­படி நடத்த வேண்­டும் என்­றும் அதில் உறுப்­பி­னர்­கள் தேர்ந்து எடுக்­கும் செயல்­முறை எப்­படி இருக்க வேண்­டும் என்­றும் அக்­கல்­வெட்டு­களில் விளக்­கப்­பட்­டுள்­ளது," என்­றார் பிரதமர் மோடி.