பாஜகவின் சாதனைகளைப் பரப்புமாறு அமைச்சர்களுக்கு வலியுறுத்து

பாஜகவின் சாதனைகளைப் பரப்புமாறு அமைச்சர்களுக்கு வலியுறுத்து

1 mins read
985c6ef2-fb02-49f2-a35a-adfb108954c0
-

புது­டெல்லி: நாடா­ளு­மன்­றத் தேர்­தல் நெருங்கி வர­வி­ருப்­ப­தால் கடந்த 8½ ஆண்­டு­களில் பா.ஜனதா அரசு செய்த சாத­னை­களை மக்­க­ளி­டம் பரப்ப வேண்­டும். இதை சமூ­கத்­தின் அனைத்­துப் பிரி­வு­களை சேர்ந்த மக்­க­ளி­ட­மும் கொண்டு சேர்க்க வேண்­டும் என்று பிர­த­மர் நரேந்­திர மோடி, தன் அமைச்­சர்­க­ளுக்கு வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

இல­வச உணவு தானி­யம் போன்ற நலத்­திட்­டங்­கள் அனைத்து சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மக்­க­ளுக்­கும், அனைத்து மாநி­லங்­க­ளின் ஏழை எளி­ய­வர்க்கு எவ்­வாறு பயன் அளித்­தன என்­பதை விளக்­கிச் சொல்ல வேண்­டும். அதே வேளை­யில் நடுத்­தர வகுப்­பைச் சேர்ந்­த­வர்­க­ளின் நலன் கரு­தி­யும் பல்­வேறு திட்­டங்­களை மத்­திய அரசு மேற்­கொண்­டுள்­ளது. அவர்­க­ளுக்கு பல்­வேறு வழி­களில் உத­விய அந்­தத் திட்­டங்­க­ளின் விவ­ரங்­க­ளு­டன் நடுத்­தர வகுப்­பி­னரை அணுகி அது குறித்து அவர்­க­ளி­டம் எடுத்­து­ரைக்க வேண்­டும் என்று தன் அமைச்­சர்­க­ளுக்கு பிர­த­மர் மோடி வலி­யு­றுத்­தி­னார்.