புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் அலுவலகக் கட்டடத் திறப்புவிழா ஒன்றில் கலந்துகொள்ள நேற்றுமுன்தினம் வருகை தந்திருந்த அமைச்சர் மீது உதவி துணை காவல்துறை ஆய்வாளர் கோபால் தாஸ் என்பவர் துப்பாக்கி சூடு நடத்தினார்.
அந்தச் சம்பவத்தில் ரத்தவெள்ளத்தில் மயங்கி விழுந்த அமைச்சர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஒடிசா மாநிலத்தின் சுகாதார அமைச்சரான நபா கிஷோர் (61 வயது) உயிரிழந்த இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர், ஒடிசா மாநிலத்தின் பிரஜ்ராஜ்நகர் நகராட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான புதிய அலுவலகங்களைத் திறந்துவைப்பதற்காக நேற்று முன்தினம் காரில் வந்து இறங்கினார். அப்போது அருகில் இருந்த உதவி துணை காவல் ஆய்வாளர் ஒருவர் திடீரென அமைச்சரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில், அமைச்சரின் மார்பில் இரண்டு குண்டுகள் பாய்ந்தன என்று கூறப்படுகிறது.

