அதிபர்: உலக நாடுகளுக்குத் தீர்வுகள் வழங்குகிறது இந்தியா

அதிபர்: உலக நாடுகளுக்குத் தீர்வுகள் வழங்குகிறது இந்தியா

2 mins read
0f9ededa-fd23-49cb-bec9-1e974fa00efd
-

புது­டெல்லி: மத்­திய அரசு ஏழை­களின் வாழ்வை மேம்­ப­டுத்­து­வதையே தனது இலக்­கா­கக் கொண்டு செயல்­பட்டு வரு­வ­தாக இந்திய அதி­பர் திரௌ­பதி முர்மு தெரி­வித்­துள்­ளார்.

பட்­ஜெட் கூட்­டத்­தொ­டர் நேற்று தொடங்­கி­யதை அடுத்து, நாடா­ளு­மன்­றக் கூட்­டுக்­கூட்­டத்­தில் உரை­யாற்­றிய அவர், தீர்க்­க­மான முடி­வு­களை எடுக்­கும் அரசு எனும் பெயரை மத்­திய அரசு பெற்­றுள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.

எதிர்­வ­ரும் 2047க்குள் இந்தி­யாவை வளர்ந்த நாடாக உரு­வாக்க இந்­திய குடி­மக்­கள் அனை­வ­ரும் தங்­கள் கட­மை­களை உணர்ந்து செயல்­பட வேண்­டும் என அதி­பர் வலியுறுத்தினார். நாட்­டின் கடந்­த­கால பெரு­மி­தத்தை நவீ­னத்­துடன் இணைப்­ப­தாக மக்­க­ளின் செயல்­கள் இருக்க வேண்­டும் என்­றார் அதி­பர்.

"நாம் உரு­வாக்க உள்ள இந்­தியா என்­பது தற்­சார்பு கொண்­ட­தா­க, மக்­க­ளின் விருப்­பங்­களை நிறை­வேற்­றக்கூடி­ய­தா­க­ இருக்க வேண்­டும். அத்­த­கைய இந்­தி­யா­வில் ஏழ்மை இருக்­காது. நடுத்­தர மக்­களும் அனைத்­தை­யும் பெற்­றி­ருப்­பார்­கள்.

"இளை­யர் சக்தி, பெண்­கள் சக்தி ஆகி­ய­வற்­றுக்கு முக்­கி­யத்­து­வம் அளித்து, நாட்டை முன்­னோக்­கிக் கொண்டு செல்ல வேண்­டும். இந்­தி­யா­வின் பன்­மு­கத்­தன்மை துடிப்­பா­னது. நாட்­டின் ஒற்­றுமை யாரா­லும் அசைத்­துப் பார்க்க முடி­யா­தது," என்­றார் அதி­பர் திரௌ­பதி முர்மு.

கடந்த மூன்று ஆண்­டு­களில் மட்­டும் நாடு முழு­வ­தும் ஏறத்­தாழ 11 கோடி குடும்­பங்­க­ளுக்கு குடி­நீர் இணைப்பு வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், ஏழை­க­ளின் சிர­மங்­க­ளைப் போக்­கும் வகை­யில் வீடு கட்­டு­தல், புதிய மின் இணைப்பு வழங்­கு­தல், எரி­வாயு உருளை வழங்­கு­தல் உள்­ளிட்ட திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

இத்­த­கைய நட­வ­டிக்­கை­கள் கார­ண­மாக, பலனடைந்த குடும்­பங்­க­ளைச் சேர்ந்த குழந்­தை­கள் தன்­னம்­பிக்கை நிறைந்த குடி­மக்­க­ளாக வளர்­கின்­ற­னர் என்­றும் கடந்த ஏழு ஆண்­டு­களில் மட்­டும் ஏழை­க­ளுக்­காக நாள்­தோ­றும் ஏறத்­தாழ 11 ஆயி­ரம் வீடு­கள் கட்­டப்­பட்டு வரு­கின்­றன என்­றும் அதி­பர் கூறி­னார்.

பல்­வேறு விவ­கா­ரங்­களில் உலக நாடு­க­ளுக்கு உரிய தீர்­வு­களை வழங்­கக்­கூ­டிய நாடாக இந்­தியா உரு­வெ­டுத்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், அர­சி­யல் நிலைத்­தன்­மை­யைப் பொறுத்­த­வ­ரை­யில் மற்ற நாடு­கள் அனைத்­தை­யும் இந்­தியா முந்தி உள்­ள­தா­கக் கூறி­னார்.

இதை­ய­டுத்து உரை­யாற்­றிய துணை அதி­பர் ஜக்­தீப் தன்­கர், மத்­திய அரசு ஒப்­பிட முடி­யாத வேகத்­தில் இயங்கி வரு­வ­தா­க­வும் கடந்த ஒன்­பது ஆண்­டு­களில் நாட்­டில் பல்­வேறு ஆக்­க­பூர்­வ­மான மாற்­றங்­கள் நிகழ்ந்­துள்­ள­தா­க­வும் தெரி­வித்­தார்.

நாட்­டில் மின்­னி­லக்­கத் தொழில்­நுட்­பம் மிகப் பெரிய வளர்ச்­சியை கண்­டுள்­ள­தாக அவர் பெரு­மி­தம் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில் அதி­பர், துணை அதி­ப­ரின் உரை­கள் தேர்­தல் பிர­சார அறிக்­கை­க­ளைப் போல் இருப்­ப­தாக காங்­கி­ரஸ் கட்சி விமர்­சித்­துள்­ளது.

"மத்­திய அரசு இது­வரை செய்­துள்­ள­வற்றை புகழ்ந்து பேசிய அதி­பர், மத்­திய அரசு செய்­யத் தவ­றிய ஏரா­ள­மான விஷ­யங்­கள் குறித்து எதை­யுமே குறிப்­பி­ட­வில்லை," என முன்­னாள் மத்­திய அமைச்­சர் சசிதரூர் கூறி­யுள்­ளார்.