விமானப் பணியாளரைத் தாக்கி, எச்சில் உமிழ்ந்த பெண் கைது

விமானப் பணியாளரைத் தாக்கி, எச்சில் உமிழ்ந்த பெண் கைது

1 mins read
8ef0279d-304d-4bea-b581-59e1c0b064a8
விஸ்­தாரா விமான நிறு­வ­னத்­தின் பணி­யா­ள­ரைத் தாக்­கிய இத்­தா­லி­யப் பெண் பயணி மும்பை விமான நிலை­யத்­தில் அவ்­வி­மா­னம் தரை இறங்­கி­ய­தும் கைது செய்­யப்­பட்­டார். படம்: பிக்ஸாபே -

மும்பை: விஸ்­தாரா விமான நிறு­வ­னத்­தின் பணி­யா­ள­ரைத் தாக்­கிய இத்­தா­லி­யப் பெண் பயணி மும்பை விமான நிலை­யத்­தில் அவ்­வி­மா­னம் தரை இறங்­கி­ய­தும் கைது செய்­யப்­பட்­டார்.

நேற்று முன்­தி­னம் விமா­னம் நடு­வா­னில் பறந்­து­கொண்­டி­ருந்­த­போது இந்­தச் சம்­ப­வம் நிகழ்ந்­த­தாக ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

விஸ்­தாரா விமான நிறு­வ­னத்­துக்­குச் சொந்­த­மான விமா­னம் ஒன்று அபு­தா­பி­யில் இருந்து மும்பை நோக்கி வந்து கொண்­டி­ருந்­தது. அப்­போது இத்­தா­லி­யைச் சேர்ந்த 45 வய­துப் பெண்­மணி திடீ­ரென எழுந்து நின்று விமா­னப் பணிப்­பெண் ஒரு­வ­ரு­டன் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­டார்.

அப்­போது அவர் அரை­குறை ஆடை­யு­டன் காணப்­பட்­ட­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

விமா­னத்­தின் எகா­னமி பிரி­வில் பய­ணச்­சீட்டு வாங்­கி­யி­ருந்த அவர், தம்மை முதல் வகுப்பு (பிசி­னஸ் கிளாஸ்) இருக்­கை­யில் அமர வைக்க வேண்­டும் எனக் கூறி­யுள்­ளார். வாக்­கு­வா­தம் செய்த­ப­டியே தன் அரு­கில் இருந்த விமா­னப் பணி­யா­ளரை அவர் தாக்­கி­ய­தா­க­வும், மற்­றொரு பணி­யா­ளர் மீது எச்­சில் உமிழ்ந்­த­தா­க­வும் தெரி­கிறது.

இது­கு­றித்து விஸ்­தாரா விமானி மும்பை விமான நிலைய தரைக்­கட்­டுப்­பாட்­டுப் பிரி­வுக்கு தக­வல் கொடுத்­துள்­ளார். இதை­ய­டுத்து விமா­னம் தரை­யி­றங்­கிய பின்­னர் அந்­தப் பெண் பயணி கைதா­னார். இச்சம்­ப­வம் தொடர்­பாக உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தாக இந்­திய விமா­னப் போக்­கு­வ­ரது இயக்­கு­ந­ர­க­மும் விஸ்­தாரா நிறு­வ­ன­மும் உறுதி செய்­துள்­ளன. அப்­பெண்­ம­ணிக்கு மும்பை நீதி­மன்­றம் பிணை வழங்கி உள்­ளது.