புதுடெல்லி: சீனா உடனான இறக்குமதி அளவைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக கடந்த வாரம் 18 அமைச்சுகள் ஆலோசனை மேற்கொண்டதாகவும் அப்போது இரு நாடுகளுக்கும் இடையேயான ஏற்றுமதி, இறக்குமதியில் உள்ள சமநிலையற்ற போக்கை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

