காங்கிரஸ்: பங்குச் சந்தை வீழ்ச்சி குறித்து விசாரிக்க வேண்டும்

காங்கிரஸ்: பங்குச் சந்தை வீழ்ச்சி குறித்து விசாரிக்க வேண்டும்

1 mins read
a4777aec-780b-41fe-873b-05aed893b8b7
புது­டெல்லி: பங்­குச் சந்­தை­களில் ஏற்­பட்­டுள்ள இழப்­பு­கள் குறித்து நாடா­ளு­மன்ற கூட்­டுக்­குழு விசா­ரிக்க வேண்­டும் என எதிர்க்­கட்­சி­கள் வலி­யு­றுத்தி உள்­ளன. படம்: இபிஏ -

புது­டெல்லி: பங்­குச் சந்­தை­களில் ஏற்­பட்­டுள்ள இழப்­பு­கள் குறித்து நாடா­ளு­மன்ற கூட்­டுக்­குழு விசா­ரிக்க வேண்­டும் என எதிர்க்­கட்­சி­கள் வலி­யு­றுத்தி உள்­ளன.

அதானி குழும நிறு­வ­னங்­களுக்கு ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி கார­ண­மாக பங்­குச் சந்­தை­யில் அந்­நி­று­வ­னப் பங்­கு­க­ளின் மதிப்பு பெரும் வீழ்ச்சி அடைந்­தது. இத­னால் இந்திய பங்­குச் சந்­தை­களின் வர்த்­த­கத்­தி­லும் பாதிப்பு ஏற்­பட்­டது.

நேற்று முன்­தி­னம் நிதி­நிலை அறிக்கை தாக்­க­லா­ன­தும் இந்­தி­யப் பங்­குச் சந்­தை­கள் ஏற்­றம் கண்­டன. முத­லீட்­டா­ளர்­கள் தரப்­பில் மகிழ்ச்சி வெளிப்­பட்­ட­தால் வங்­கித்­துறை பங்­கு­க­ளின் மதிப்பு கூடி­யது.

மும்பை, தேசிய பங்­குச் சந்­தை­க­ளின் வர்த்­த­கம் லாபத்­து­டன் தொடங்­கி­யதை அடுத்து இந்­திய ரூபா­யின் மதிப்­பும் ஏற்­றம் கண்­டது.

எனி­னும் இந்­நி­லைக்கு நேர்­மா­றாக நேற்று பங்­குச் சந்தை வர்த்­த­கம் வீழ்ச்சி கண்­ட­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

நேற்று காலை வர்த்­த­கம் தொடங்­கி­ய­தும் மும்பை பங்­குச் சந்­தை­யில் சென்­செக்ஸ் குறி­யீடு 383 புள்­ளி­கள் சரிந்­தது. இதே­போல் தேசிய பங்­குச் சந்தை குறி­யீ­டும் 45 புள்­ளி­கள் வரை சரிந்­தது.

எனி­னும் இந்­நிலை விரை­வில் மாறும் என்றும் புதிய முதலீடுகள் வரும்போது சந்தை மதிப்பு கூடும் என்றும் மத்­திய அர­சுத் தரப்­பு நம்­பிக்கை தெரிவித்தது.

இந்­நி­லை­யில், நாடா­ளு­மன்ற பட்­ஜெட் கூட்­டத்­தொ­டரை சுமு­க­மாக நடத்­து­வது குறித்து மத்­திய அமைச்­சர்­க­ளு­டன் பிர­த­மர் நரேந்­திர மோடி தீவிர ஆலோ­சனை மேற்­கொண்­டார்.

அமித்ஷா, ராஜ்­நாத் சிங், பியூஷ் சாவ்லா, நிர்­மலா சீதா­ராமன், நிதின் கட்­காரி உள்­ளிட்­டோர் அதில் பங்­கேற்­ற­னர்.