புதுடெல்லி: அனைத்துலக அளவிலான சவால்களை எதிர்கொள்வதில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடனான சந்திப்புக்குப் பிறகு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின்போது இரு தரப்பு உத்திபூர்வ பங்காளித்துவ உறவு மேலும் நெருக்கமடையும் வகையில் வட்டார, அனைத்துலக அளவிலான பல்வேறு விவகாரங்கள், சவால்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அமைச்சர் பிளிங்கன் தமது டுவிட்டர் பதிவு ஒன்றில், இந்தியாவுடனான ஒத்துழைப்பை அமெரிக்கா மேலும் விரிவுபடுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த செவ்வாவய்க்கிழமை அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகரையும் சந்தித்து தாம் பேச்சுவார்த்தை நடத்தியதாக அஜித் தோவல் தெரிவித்திருந்தார். சிக்கலான, வளர்ந்து வரும் தொழில்நுட்ப முன்னெடுப்பு தொடர்பில் இணைந்து செயல்படவும் இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.

