புதுடெல்லி: உலகச் செல்வந்தர்களில் ஒருவரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனருமான பிரபல பில்கேட்ஸ், அமெரிக்க சமையல் கலை நிபுணர் எய்டான் பெர்நாத்துடன் சேர்ந்து, தான் ரொட்டி (சப்பாத்தி) சமைக்கும் காணொளியை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் மாவு பிசைந்து, உருண்டை பிடித்து, வட்டமாகத் தட்டி ரொட்டி சுடுகிறார். இது, சமூக ஊடகங்களில் அதிகவேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் பில்கேட்ஸின் சமையலைப் பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். "இந்தியாவின் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று திணை, இந்தியாவில் பல திணைகள் உள்ளன. அவற்றையும் நீங்கள் செய்து பார்க்கலாம்," என்று சிரிக்கும் எமோஜி படத்துடன் மோடி பதிவிட்டுள்ளார்.
பில்கேட்ஸ் சமையலைப் பாராட்டிய மோடி
1 mins read
-