செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
a3fcc25d-4098-46f5-8282-3908f395c07f
-

லாரி மீது பேருந்து மோதிய

விபத்தில் 18 பேர் படுகாயம்

புது­டெல்லி: உத்­த­ர­பி­ர­தேச மாநில குதார் காவல் நிலை­யத்­திற்கு உட்­பட்ட பகு­தி­யில் பய­ணி­களை ஏற்­றிக்­கொண்டு ஷாஜ­ஹான்­பூ­ரில் இருந்து பாலியா நோக்­கிச் சென்ற பேருந்து, திடீ­ரென கட்­டுப்­பாட்டை இழந்த பேருந்து, லாரி மீது மோதி விபத்­துக்­குள்­ளா­னது. இந்த விபத்­தில் 18 பேர் படு­கா­ய­ம­டைந்­த­னர். அப்­ப­கு­தி­யில் அடர்ந்த மூடு­பனி கார­ண­மாக விபத்து ஏற்­பட்­ட­தாகக் காவல்­துறை கண்­கா­ணிப்­பா­ளர் எஸ்.ஆனந்த் கூறி­னார்.

ராமர் கோயிலுக்கு புனித கற்கள்

புதுடெல்லி: அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலில் கருவறையில் வைக்கப்படும் ராமர், சீதை சிலைகளைச் தயாரிக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதற்கு, நேர்மறை அதிர்வுகளை தரக்கூடிய புனித கற்களான சாளக்கிராம கற்களில் சாமி சிலைகளை செதுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கற்கள் இமயமலை அருகே உள்ள கண்டகி நதியில் மட்டுமே உற்பத்தியாகக் கூடியவை. இந்த நிலையில் சீதையின் பிறப்பிடமாக அறியப்படும் நேப்பாளத்தின் ஜனக்பூரில் இருந்து லாரி மூலம் அயோத்திக்குப் புனிதக் கற்கள் கொண்டு வரப்பட்டன. முன்னதாக நேப்பாள மக்கள் பயபக்தியுடன் கற்களுக்குப் பூஜை செய்து வழியனுப்பி வைத்தனர்.

'நித்தியானந்தா மீது

நடவடிக்கை இல்லை'

புதுடெல்லி: நித்தி­யா­னந்­தா­வுக்கு எதி­ராக அனைத்துலக காவல் அமைப்பான இண்டர்போல் எந்­த­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜ­ராத் காவல்­துறை, நித்தியானந்தா மீதான பல்வேறு வழக்குகள் தொடர்பில் இண்­டர்­போல் உத­வியை நாடி­யுள்­ள­தாக தக­வல்­கள் வெளி­யா­னது. இன்­டர்­போல் மூல­மாக 'புளூ­கார்­னர்' எச்­ச­ரிக்கை அறி­விப்பு வெளி­யிட்டு நித்­தி யானந்­தாவை தேடும் பணி நடை­பெற்று வரு­வ­தா­க­வும் குஜ­ராத் காவல்­து­றை­யி­னர் தெரி­வித்து இருந்­த­னர்.

இதற்கிடையே இன்­டர்­போ­ல் தலைமைச் செய­ல­கத்­தில் இருந்து இரண்டு கடி­தங்­கள் வெளி­யி­டப்பட்­டன. அதில் நித்­தியா­னந்­தா­வுக்கு எதி­ராக எந்­த­வித எச்­ச­ரிக்கை அற­விப்போ அல்­லது கைது ஆணையோ பிறப்­பிக்­கப்­ப­ட­வில்லை எனக் கூறப்­பட்­டுள்­ள­தாகக் கூறப்படுகிறது.