18 வயதுப் பெண்ணுக்கு கை மாற்று அறுவை சிகிச்சை: மும்பை மருத்துவர்கள் சாதனை

2 mins read
bb7e3d6d-b959-49be-918f-4e34508d9656
-

மும்­பை: பதி­னெட்டு வயது இளம்­பெண்­ணுக்கு கை மாற்று அறுவை சிகிச்சை செய்து மும்­பை­யில் உள்ள தனி­யார் மருத்­து­வ­மனை மருத்­து­வர்­கள் சாதனை புரிந்­துள்ள­னர்.

இதை­ய­டுத்து மற்­ற­வர்­க­ளைப் போன்று தானும் இயல்­பான வாழ்க்­கையை வாழ முடி­யும் என அறுவை சிகிச்­சை­யால் பலன் அடைந்­துள்ள இளம்­பெண் சாம்யா மன்­சூரி மகிழ்ச்சி தெரி­வித்­துள்­ளார்.

குஜ­ராத் மாநி­லம், பரூக் மாவட்­டத்­தைச் சேர்ந்த சாம்­யா­வுக்கு பிறக்­கும்­போதே வலது கை கிடை­யாது. இத­னால் பல்­வேறு சிர­மங்­களை, கிண்­டல்­களை எதிர்­கொண்­ட­தா­கச் சொல்­கி­றார்.

கணி­னித்­து­றை­யில் பட்­டப்­படிப்பு மேற்­கொண்­டுள்ள அவர், அடுத்து இதே துறை­யில் பட்­ட­மேற்­ப­டிப்பை தொடர திட்­ட­மிட்டுள்­ளார்.

"ஒரு கை இல்­லா­மல் பதினெட்டு ஆண்­டு­க­ளைக் கடந்து­விட்­டேன். சிறு வய­தில் பள்­ளிக்­குச் செல­லும்­போது வகுப்புத் தோழி­கள் பலர் என்னைக் கிண்­டல் செய்­வார்­கள். அத­னால் பொது இடங்­க­ளுக்­குச் செல்­வதை அறவே தவிர்த்து வந்தேன். இனி அத்­த­கைய கிண்டல்­க­ளுக்கு வாய்ப்பு இல்லை.

"புதிய கை பொருத்­தப்­பட உள்­ள­தாக தக­வல் வந்­தது முதல் வாக­னம் ஓட்­டு­வது உட்­பட புதிய கையால் நிறைய விஷ­யங்­களைச் செய்ய வேண்­டும் என என் மனதில் கன­வு­கள் விரி­யத் தொடங்­கின," என்­கி­றார் சாம்யா.

தனது மக­ளுக்கு புதிய கை மாற்று அறுவை வெற்­றி­க­ர­மாக நடந்­துள்­ள­தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார் சாம்­யா­வின் தாயார் ஷெனாஸ் மன்­சூரி.

கடந்த ஐந்து ஆண்­டு­களாகவே இந்­தத் தரு­ணத்­துக்­கா­கக் காத்­தி­ருந்­த­தா­கச் சொல்­பவர், இப்­போது பூமி­யில் மிக­வும் மகிழ்ச்­சி­யான தாய் தாமா­கத்­தான் இருக்க முடி­யும் என்­கி­றார்.

18 வயது நிரம்­பிய பிற­கு­தான் சாம்­யா­வுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடி­யும் என்று மருத்­து­வர்­கள் கூறி­ய­தா­க­வும் கடந்த ஜனவரி 10ஆம் தேதி­தான் தன் மக­ளுக்கு 18 வயது நிறை­வ­டைந்­தது என்­றும் சொல்­கி­றார் ஷெனாஸ்.

"சில தினங்­க­ளுக்கு முன்­பு­தான் சாம்­யா­வுக்­கு­ரிய மாற்று கை கிடைத்­துள்­ளது. இதை­ய­டுத்து, அறுவை சிகிச்சை வெற்­றி­க­ர­மாக நடந்­தே­றி­யது.

"சாம்­யா­வின் பெயரை உறுப்பு மாற்று அறுவை சிகிச்­சைக்­கா­கப் பதிவு செய்த சில நாள்­க­ளி­லேயே கொடை­யா­ளர் கிடைத்­தார். ஏறத்­தாழ இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்­பி­ருந்தே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்து சாம்­யா­வுக்கு உரிய ஆலோ­ச­னை­கள் வழங்­கப்­பட்டு வந்­தன. எனவே, மன­த­ள­வில் அவர் அதற்­குத் தயா­ராக இருந்­தார்," என்­கி­றார் சாம்யா­வுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்­து­வர் நிலேஷ் சத்பாய்.