தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

232 கைப்பேசி செயலிகள் முடக்கம்

1 mins read
f96c2562-1d85-45f7-9e4b-8a851832e7fc
-

புது­டெல்லி: இணைய வழி சூதாட்­டம், கடன் சேவை வழங்­கும் 232 கைப்­பேசி செய­லி­களுக்கு மத்திய அரசு தடை­விதித்­துள்­ளது. இவை அனைத்­துமே வெளி­நாட்டு நிறு­வ­னங்­களால் உரு­வாக்­கப்­பட்ட செய­லி­கள் எனத் தெரி­ய­வந்­துள்­ளது.

கைப்­பேசி செய­லி­கள் மூலம் நாடு முழு­வ­தும் பல்­வேறு மோசடி­கள் நிகழ்ந்து வரு­கின்­றன. இத­னால் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

குறிப்­பாக இணை­யம் வழி நடை­பெ­றும் சூதாட்­டம் கார­ண­மாக உயிரை மாய்த்­துக்­கொள்­வோர் எண்­ணிக்கை நாள்­தோறும் அதி­க­ரித்து வரு­கிறது.

மேலும், சீன செய­லி­க­ளைப் பயன்­ப­டுத்தி கடன் சேவை வழங்­கும் சில தனி­யார் நிறு­வ­னங்­கள் பல்­வேறு அத்­து­மீ­றல்­களில் ஈடு­படு­வ­தா­க­வும் புகார்­கள் எழுந்­துள்­ளன. தவிர, கைப்­பேசி செயலி­களை வைத்து இயங்­கும் சில நிறு­வ­னங்­கள் இந்­திய குடி­மக்­கள் தொடர்­பான விவ­ரங்­களை முறை­கே­டாக மற்ற தரப்பு­க­ளு­டன் பகிர்­வ­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் மத்­திய உள்­துறை அமைச்­சின் அறி­வு­றுத்­தல்­களை ஏற்று வெளி­நாட்டு செயலி­களை முடக்கி உள்­ளது மத்­திய மின்­னணு, தக­வல் தொழில்­நுட்ப அமைச்சு தெரி­வித்­தது.

வெளி­நாட்­டுச் செய­லி­க­ளால் நாட்­டின் பொரு­ளி­யல் நிலைத்­தன்­மைக்கு அச்­சு­றுத்­தல் ஏற்­படும் என்­றும் இது­போன்ற பல்­வேறு அம்­சங்­க­ளைக் கவ­னத்­தில் கொண்டே செய­லி­க­ளுக்­குத் தடை­வி­திக்­கப்­ப­டு­வ­தா­க­வும் மத்­திய அரசு வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.