36 பேர் கொண்ட பஞ்சாப் மாநிலப் பள்ளித் தலைமையாசிரியர்கள் குழு சிங்கப்பூர்ப் பயணம்

36 பேர் கொண்ட பஞ்சாப் மாநிலப் பள்ளித் தலைமையாசிரியர்கள் குழு சிங்கப்பூர்ப் பயணம்

1 mins read
54bf2712-3ae4-4ff2-9032-7670ad5b6d09
பஞ்­சாப் மாநி­லத்­தைச் சேர்ந்த 36 அர­சுப் பள்ளிகளைச் சேர்ந்த தலை­மை­யா­சி­ரி­யர்­கள் சிங்­கப்­பூ­ரில் ஐந்து நாள்­கள் நடை­பெறும் நிபு­ணத்­துவ பயிற்சித் திட்ட நிகழ்­வில் பங்­கேற்­கின்­ற­னர். படம்: பிக்ஸாபே -

சண்­டிகர்: பஞ்­சாப் மாநி­லத்­தைச் சேர்ந்த 36 அர­சுப் பள்ளிகளைச் சேர்ந்த தலை­மை­யா­சி­ரி­யர்­கள் சிங்­கப்­பூ­ருக்­குப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ள­னர்.

சிங்­கப்­பூ­ரில் ஐந்து நாள்­கள் நடை­பெறும் நிபு­ணத்­துவ பயிற்சித் திட்ட நிகழ்­வில் அவர்­கள் பங்­கேற்­கின்­ற­னர்.

பஞ்­சாப் மாநி­லத்­தில் பொதுக்­கல்வி அமைப்பை மேம்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­யாக இந்த முன்னெடுப்பு மேற்­கொள்­ளப்­படு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்ளது.

36 கல்­வி­யா­ளர்­கள் கொண்ட குழு­வின் பய­ணத்தைப் பஞ்­சாப் தலை­ந­கர் சண்­டி­க­ரில் நடை­பெற்ற நிகழ்­வின்­போது அம்­மாநில முதல்­வர் பக­வந்த் மான் கொடி­ய­சைத்துத் தொடங்கி வைத்­தார்.

"இந்­தப் பய­ணத்­தின் மூலம் கல்­வித்­துறை சார்ந்த புதிய தொழில்நுட்­பங்­களைத் தலை­மை­யா­சி­ரி­யர்­கள் அறிந்­து­கொள்ள முடி­யும். பய­ணம் முடிந்து நாடு திரும்­பிய பின்­னர் மற்­ற­வர்­க­ளு­டன் அவற்­றைப் பகிர்ந்­து­கொள்ள முடி­யும்.

"இத­னால் மாண­வர்­க­ளுக்குத் தர­மான கல்­வியை வழங்க முடி­யும்," என்­றார் முதல்­வர் பக­வந்த் மான்.

இந்­திய தலை­மை­யா­சி­ரி­யர் குழு­வுக்கு சிங்­கப்­பூ­ரில் உள்ள தலை­மை­யா­சி­ரி­யர் அகாட­மி­யில் பயிற்சி அளிக்­கப்­படும்.

வரும் மார்ச் மாதம் பஞ்­சாப் மாநி­லத்­தில் இருந்து இதே­போல் தலை­மை­யா­சி­ரி­யர்­க­ளைக் கொண்ட இரண்­டா­வது குழு சிங்­கப்­பூ­ருக்­கு வரும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் உள்ள தலை­மை­யா­சி­ரி­யர் அகாடமி­யில் இந்­தி­யா­வைச் சேர்ந்த தலை­மை­யா­சி­ரி­யர்­க­ளுக்கு பயிற்சி அளிக்­கப்­ப­டு­வது இதுவே முதன்­மு­றை­யா­கும்.