தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

2 கிலோமீட்டர் தண்டவாளத்தைத் திருடி விற்ற கும்பல்

1 mins read
151dcd4b-775e-450c-a6f4-ab1d9f3a43bd
பாட்னா: சமஸ்­டி­பூர் ரயில்வே கோட்­டத்­தில் பாந்­தாவ்ல் என்ற ரயில் நிலை­யம் உள்­ளது. இந்த ரயில் நிலை­யத்­தில் இருந்து லோஹாத் என்ற சர்க்­கரை ஆலைக்கு ரயில்வே பாதை ஒன்று உள்­ளது. படம்: பிக்ஸாபே -

பாட்னா: சமஸ்­டி­பூர் ரயில்வே கோட்­டத்­தில் பாந்­தாவ்ல் என்ற ரயில் நிலை­யம் உள்­ளது. இந்த ரயில் நிலை­யத்­தில் இருந்து லோஹாத் என்ற சர்க்­கரை ஆலைக்கு ரயில்வே பாதை ஒன்று உள்­ளது.

இந்தச் சர்க்­கரை ஆலை சில ஆண்­டு­க­ளாக இயங்­க­வில்லை. எனவே, இரண்டு கிலோ­மீட்­டர் நீள­முள்ள இந்த ரயில் பாதை­யில் ரயில் போக்­கு­வ­ரத்து ஏதும் இல்­லா­மல் இருந்­துள்­ளது.

இந்­நி­லை­யில், இந்த ரயில் பாதை­யில் உள்ள தண்­ட­வா­ளங்­களை மர்­மக் கும்­பல் ஒன்று திருடி விற்­றுள்­ளது.

தண்­ட­வா­ளத் துண்­டு­க­ளோடு ரயில்­வேக்­குச் சொந்­த­மான இதர பொருள்­களும் திருடி விற்­கப்­பட்டு உள்­ளன. இவற்­றின் மதிப்பு கோடி ரூபாய்க்­கும் மேல் இருக்­கும் என மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.

இந்த அதிர்ச்­சிச் சம்­ப­வம் குறித்து கடந்த மாதம் 24ஆம் தேதி­தான் அதி­கா­ரி­க­ளுக்­குத் தெரிய வந்­தது.

இந்­தத் திருட்­டுச் சம்­ப­வம் பற்றி அறிந்த ரயில்வே நிர்­வா­கம் பாது­காப்பு ஊழி­யர்­கள் இரு­வரை வேலை­யி­லி­ருந்து இடை­நீக்­கம் செய்­துள்­ளது.

மேலும், சம்­ப­வம் தொடர்­பாக வழக்­குப் பதிவு செய்து துறை­சார்ந்த விசா­ர­ணைக்கு உத்­த­ர­வி­டப்­பட்டு உள்­ளது.

இந்­தத் திருட்­டுச் சம்­ப­வத்­தில் ரயில்வே ஊழி­யர்­களுக்கும் தொடர்பு இருக்­குமோ என்ற சந்­தே­கம் எழுந்­துள்­ள­தால் அந்­தக் கோணத்­தி­லும் விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது.

இதற்கு முன்­னர் ஜன­வரி 19ஆம் தேதி, பீகார் தலை­ந­கர் பாட்­னா­வில் கைபே­சிக் கோபு­ரம் ஒன்று திரு­டப்­பட்ட பர­ப­ரப்பு சம்­ப­வம் நடந்தது குறிப்­பி­டத்­தக்­கது.