நிலநடுக்கத்தால் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு உதவ இந்தியா நேற்று இரண்டாவது தேசிய பேரிடர் மீட்புக்
குழுவை அனுப்பியது.
உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரிலிருந்து விமானம் மூலம் பேரிடர் மீட்புக் குழு துருக்கிக்குப் புறப்பட்டுச் சென்றது. மருத்துவர்கள் மற்றும் தாதியருடன் சிறப்புப்
பயிற்சி பெற்ற மோப்ப நாய்களும் குழுவில் இடம்பெற்றன. மருந்துப் பொருள்கள் அடங்கிய நிவாரணப் பொருள்களையும் இந்தியா அனுப்பியுள்ளது.
படம்: இபிஏ

